Nanmugan Thiruvandhadhi — The Sacred Linked Verses on the Four- Faced Lord
(Chapter 17)
நான்முகன் திருவந்தாதி
Verse 1
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூமழிசைப் பரனடியே வாழ்தது.
Verse 2
நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.
Verse 3
தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் ஆருமறியார் அவன்பெரு மை, - ஓரும் பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் அருள்முடிவ தாழியான் பால்.
Verse 4
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும், ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத் தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில் அருபொருளை யானறிந்த வாறு?
Verse 5
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும், கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.
Verse 6
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம், வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில் ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே, அருநான்கு மானாய் அறி.
Verse 7
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் ஈனவரே யாதலால் இன்று.
Verse 8
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை.
Verse 9
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த கூரம்பன் அல்லால் குறை.
Verse 10
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு.
Verse 11
ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும் பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான் வல்லரே யல்லரே வாழ்த்து.
Verse 12
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம் தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை வழாவண்கை கூப்பி மதித்து.
Verse 13
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித் தாய் மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
Verse 14
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக் கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும் மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன்.
Verse 15
நாரா யணனென்னை யாளி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்தன் - பேரான பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு ஆசைப்பட் டாழ்வார் பலர்.
Verse 16
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம் மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை.
Verse 17
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர் தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர் போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய தேராழி யால்மறைத்தா ரால்.
Verse 18
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
Verse 19
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச் சார்த்தி யிருப்பார் தவம்.
Verse 20
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக் காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம் ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
Verse 21
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும் நீயே தவத்தேவ தேவனும் - நீயே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இவை,
Verse 22
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற இவையா எரிவட்டக் கண்கள் - இவையா எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான், அரிபொங்கிக் காட்டும் அழகு.
Verse 23
அழகியான் தானே அரியுருவன் தானே பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த் தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே மீனா யுயிரளிக்கும் வித்து.
Verse 24
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த கார்மேக மன்ன கருமால் திருமேனி, நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
Verse 25
நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் - புகழ்ந்தாய் சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய் மனப்போர் முடிக்கும் வகை.
Verse 26
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும் வகையால் வருவதொன் றுண்டே, வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும் வயிர வழக்கொழித்தாய் மற்று.
Verse 27
மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை, கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக் கண்டுகொள் கிற்கு மாறு.
Verse 28
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள் - நீறாடி தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை யான்காண வல்லேற் கிது.
Verse 29
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது, இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை, ஊனொடுங்க எய்தான் உகப்பு.
Verse 30
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே, மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம் ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால் அன்றிக்கொண் டெய்தான் அவன்.
Verse 31
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில் அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே, வெள்ளத் தரவணையின் மேல்.
Verse 32
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம் தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர் பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும் கருமாயம் பேசில் கதை.
Verse 33
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி.
Verse 34
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு - வடிப்பவள வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து, கோப்பின்னு மானான் குறிப்பு.
Verse 35
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த, குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல், தான்கடத்தும் தன்மையான் தாள்.
Verse 36
தாளால் உலகம் அளந்த அசைவேகொல், வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத் தணை.
Verse 37
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத் தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத் தனா வான்.
Verse 38
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு, தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும், அண்டந் திருமால் அகைப்பு.
Verse 39
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன், உகைக்கு மேல், எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும், அப்போது ஒழியும் அழைப்பு.
Verse 40
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை வெருவி யரவொடுங்கும் வெற்பு.
Verse 41
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார், கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
Verse 42
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர, ஓண விழவில் ஒலியதிர - பேணி வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய், திருவேங் கடமதனைச் சென்று.
Verse 43
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை, நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும், அடிக்கமலம் இட்டேத்து மங்கு.
Verse 44
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள் சடையேற வைத்தானும் தாமரைமே லானும் குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
Verse 45
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே, போம்குமர ருள்ளீர் புரிந்து.
Verse 46
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும் தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
Verse 47
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென் றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும் வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே, நாடுவளைத் தாடுமேல் நன்று.
Verse 48
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் , பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடு முடைவேங் கடம்.
Verse 49
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை.
Verse 50
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திருநாமம், கூறுவதே யாவர்க்கும் கூற்று.
Verse 51
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன் உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.
Verse 52
எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால - புனக்காயா வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை.
Verse 53
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர், தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால் விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார், கடமுண்டார் கல்லா தவர்.
Verse 54
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் தேவரைத் தேறல்மின் தேவு.
Verse 55
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார், கற்கின்ற தெல்லாம் கடை.
Verse 56
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை யாரோத வல்லா ரவர்.
Verse 57
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு, எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக் கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற் குடனின்று தோற்றா னொருங்கு.
Verse 58
ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான், பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம் ஆனவர்தா மல்லாக தென்.
Verse 59
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான், மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த் தாயனுக் காக்கினேன் அன்பு.
Verse 60
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக் கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
Verse 61
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின் தாட்பார்த் துழிதருவேன் தன்மைய - கேட்பார்க் கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை விரும்புவதே விள்ளேன் மனம்.
Verse 62
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை, தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான் இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான், சென்றொன்றி நின்ற திரு.
Verse 63
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார், கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய், தார்தன்னைச் சூடித் தரித்து.
Verse 64
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர், விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது.
Verse 65
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக் காதானை யாதிப் பெருமானை,- நாதானை நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும் சொல்லானை, சொல்லுவதே சூது.
Verse 66
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை மாதாய மாலவனை மாதவனை - யாதானும் வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத் தில்லையோ சொல்லீ ரிடம்.
Verse 67
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு படநா கணைநெடிய மாற்கு,- திடமாக வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான் வையேனாட் செய்யேன் வலம்.
Verse 68
வலமாக மாட்டாமை தானாக, வைகல் குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை, சீரணனை யேத்தும் திறம்.
Verse 69
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு.
Verse 70
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம், புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில் மறைப்பொருளும் அத்தனையே தான்.
Verse 71
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து, ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் - யானொருவன் இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச் சென்றாங் கடிப்படுத்த சேய்.
Verse 72
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன் றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
Verse 73
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும், சொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே யாவதீ தன்றென்பா ரார்.
Verse 74
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த, பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த பண்டைத்தா னத்தின் பதி.
Verse 75
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி, மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன் வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை, அல்லதொன் றேத்தாதென் நா.
Verse 76
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு.
Verse 77
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் றனமாயை யிற்பட்டதற்பு.
Verse 78
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான், எவ்வினையும் மாயுமால் கண்டு.
Verse 79
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல் கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும் தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங் காரலங்க லானமையா லாய்ந்து.
Verse 80
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால் வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம் மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம் வைகுந்தம் காண்பார் விரைந்து.
Verse 81
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க, கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம் பாடின ஆடின கேட்டு,படுநரகம் வீடின வாசற் கதவு.
Verse 82
கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய், கற்றமொழி யாகிக் கலந்து.
Verse 83
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை நலந்தானு மீதொப்ப துண்டே - அலர்ந்தலர்கள் இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள் விட்டேத்த மாட்டாத வேந்து.
Verse 84
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும், பின்னால்தான் செய்யும் பிதிர்.
Verse 85
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு, எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும் கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும் தொழக்காதல் பூண்டேன் தொழில்.
Verse 86
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, வில்லாளன் நெஞ்சத் துளன்.
Verse 87
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய் தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும், என்னொப்பார்க் கீச னிமை.
Verse 88
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட, சமய விருந்துண்டார் காப்பார் - சமயங்கள் கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டா னுலகோ டுயிர்.
Verse 89
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி, அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது.
Verse 90
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம், வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை, கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு.
Verse 91
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான் பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே தாழா யிருப்பார் தமர்.
Verse 92
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள் தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று.
Verse 93
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய், கருவிருந்த நாள்முதலாக் காப்பு.
Verse 94
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
Verse 95
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு வேம்பும் கறியாகும் ஏன்று.
Verse 96
ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன் கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.
Verse 97
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Nanmugan Thiruvandhadhi — The Sacred Linked Verses on the Four- Faced Lord. It includes 97 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.