Ramanuja Nootranthadi — The Hundred Linked Verses on Ramanuja
(Chapter 24)
இராமானுஜ நூற்றந்தாதி
Verse 1
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும் மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள் அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.
Verse 2
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று.
Verse 3
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமா நுசமுனிதன் வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்- ஆய்ந்தபெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ்வே தம்தரிக்கும் பேராத உள்ளம் பெற.
Verse 4
வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற முதல்தாய் சடகோபன்; மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமா நுசன்.
Verse 5
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
Verse 6
மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன் இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும் இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.
Verse 7
இலனது வுடையனி தெனநினை வரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந் நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
Verse 8
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள் தாமவரிவருவர், அதுவிது வுதுவெது வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.
Verse 9
அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள் அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர் அவரவ விதிவழி யடையநின் றனரே.
Verse 10
நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர் என்றுமோரியல்வினர் எனநினைவரியவர் என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.

Your Children Will Be Hindu
Why Sanatana Dharma Will Outlive Religion — By Rudra Ved
How do you explain these ancient Vedic verses to your children, friends, or skeptical thinkers? Written by a former lifelong atheist and tested across 500+ unedited live debates, this book provides the rational, modern vocabulary that today's questioning generation needs.
Verse 11
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.
Verse 12
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.
Verse 13
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள் உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள் உளனென விலனென விவைகுண முடைமையில் உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
Verse 14
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன் பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
Verse 15
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல் நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Ramanuja Nootranthadi — The Hundred Linked Verses on Ramanuja. It includes 15 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.