Verse 1
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்\nமருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்\nஅந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்\nசிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.
Verse 2
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்\nஇனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்\nஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்\nபாதங்கள் யாமுடைய பற்று.
Verse 3
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமா நுசமுனிதன்\nவாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்- ஆய்ந்தபெருஞ்\nசீரார் சடகோபன் செந்தமிழ்வே தம்தரிக்கும்\nபேராத உள்ளம் பெற.
Verse 4
வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ்மேல்\nஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற\nமுதல்தாய் சடகோபன்; மொய்ம்பால் வளர்த்த\nஇதத்தாய் இராமா நுசன்.
Verse 5
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
Verse 6
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்\nமனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்\nஇனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்\nஇனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.
Verse 7
இலனது வுடையனி தெனநினை வரியவன்\nநிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்\nபுலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்\nநலனுடை யொருவனை நணுகினம் நாமே.
Verse 8
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்\nதாமவரிவருவர், அதுவிது வுதுவெது\nவீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை\nஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.
Verse 9
அவரவர் தமதம தறிவறி வகைவகை\nஅவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்\nஅவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்\nஅவரவ விதிவழி யடையநின் றனரே.
Verse 10
நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்\nநின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்\nஎன்றுமோரியல்வினர் எனநினைவரியவர்\nஎன்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.
Verse 11
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nபடர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்\nஉடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்\nசுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.
Verse 12
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்\nவரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்\nபுரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து\nஅரனயன் எனவுல கழித்தமைத் துளனே.
Verse 13
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்\nஉளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்\nஉளனென விலனென விவைகுண முடைமையில்\nஉளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
Verse 14
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்\nபரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற\nகரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்\nகரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
Verse 15
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nவரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற\nபரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்\nநிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.
Verse 16
வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்\nவீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.
Verse 17
மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்\nஎன்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே.
Verse 18
நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை\nசேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.
Verse 19
இல்லது முள்ளதும் அல்ல தவனுரு\nஎல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.
Verse 20
அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்\nசெற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.
Verse 21
பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்\nபற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.
Verse 22
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்\nஅடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே.
Verse 23
உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்\nஉள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே.
Verse 24
ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்\nவிடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.
Verse 25
எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில\nவண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.
Verse 26
சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்\nசீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.
Verse 27
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய\nவித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்\nமத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு\nஎத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.
Verse 28
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,\nஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,\nதெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,\nஅளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..
Verse 29
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,\nஅமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,\nஅமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,\nஅமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?
Verse 30
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,\nயாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,\nபேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,\nபேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.
Verse 31
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,\nகணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,\nவணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,\nஉணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.
Verse 32
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,\nஉணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.
Verse 33
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,\nநன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,\nஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,\nநன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.
Verse 34
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே\nமாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,\nநாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,\nமாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.
Verse 35
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்\nதலத்து, எழுதிசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்\nபுலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே\nசொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே.
Verse 36
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,\nமயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,\nபுயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்தநல் லடிப்போது ,\nஅயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே.
Verse 37
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,\nஅமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,\nஅமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்\nஅமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே.
Verse 38
அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்\nஅஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி\nவெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்\nவன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?
Verse 39
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்\nஎன்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?\nமுன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்\nமுன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
Verse 40
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.\nமதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு\nமதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி\nமதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.
Verse 41
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத\nஎன்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ\nநன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்\nநன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?
Verse 42
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,\nநல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்\nமல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.\nமல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.
Verse 43
அருளாத நீரருளி யவராவி துவராமுன்\nஅருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று\nஅருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nயருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத் தோமே?
Verse 44
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது\nஎன்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு\nஎன்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருதவாய்ச்சொல்\nஎன்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே?
Verse 45
நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்\nநோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்\nசாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது\nவாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.
Verse 46
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,\nவாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,\nவீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?\nஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.
Verse 47
உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,\nகடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்\nஅடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nவிடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே.
Verse 48
அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை\nவளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த\nஅளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்\nவளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.
Verse 49
வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன்\nகளவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன், பின்னையும்,\nதளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்,\nஇளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.
Verse 50
நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும்,\nபுனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால்,\nநினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே,\nமனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே.
Verse 51
மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்,\nநீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன்\nசேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால்\nதாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.
Verse 52
தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய\nவானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்\nதானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்\nவானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே.
Verse 53
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா\nகூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!\nவானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்\nதேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.
Verse 54
வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!\nமனைசே ராயர் குலமுதலே மாமா யன்னே மாதவா!\nசினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!\nஇனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!
Verse 55
அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை\nகடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை\nசெடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை\nஅடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே?
Verse 56
உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு\nஉண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி\nமண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்\nஅண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே
Verse 57
மாயோம் தீய அலவ லைப் பெருமா வஞ்சப் பேய்வீய\nதூயகுழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட\nமாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்\nதாயோன் தம்மா னென்னம்மான் அம்மாமூர்த்தி யைச்சார்ந்தே.
Verse 58
சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து\nதீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,\nநேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.
Verse 59
மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று\nமாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்\nபாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்\nபாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே.
Verse 60
பரிவதி லீசனைப் பாடி விரிவது மேவ லுறுவீர்\nபிரிவகை யின்றிநன் னீர்தூய் புரிவது வும்புகை பூவே.
Verse 61
மதுவார் தண்ணந் துழாயான்முதுவே தமுதல் வனுக்கு\nஎதுவே தென்பணி என்னாததுவே யாட்செய்யு மீடே.
Verse 62
ஈடு மெடுப்புமி லீசன் மாடு விடாதென் மனனே\nபாடுமென் நாவலன் பாடல் ஆடுமெ னங்கம ணங்கே.
Verse 63
அணங்கென ஆடுமெ னங்கம் வணங்கி வழிபடு மீசன்\nபிணங்கி யமரர் பிதற்றும்குணங்கெழு கொள்கையி னானே.
Verse 64
கொள்கைகொ ளாமையி லாதான் எள்கலி ராகமி லாதான்\nவிள்கைவிள் ளாமைவி ரும்பி உள்கலந் தார்க்கோ ரமுதே.
Verse 65
அமுதம் அமரகட் கீந்த நிமிர்சுட ராழி நெடுமால்\nஅமுதிலு மாற்ற இனியன் நிமிர்திரை நீள்கட லானே.
Verse 66
நீள்கடல் சூழிலங் கைக்கோன் தோள்கள் தலைதுணி செய்தான்\nதாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்க ழிமினே.
Verse 67
கழிமின்தொண் டீர்கள் கழித்துத் தொழுமீன் அவனைத் தொழுதால்\nவழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே.
Verse 68
தரும அரும்பய னாய திருமக ளார்தனிக் கேள்வன்,\nபெருமை யுடைய பிரானார், இருமை வினைகடி வாரே.
Verse 69
கடிவார் தீய வினைகள் நொடியா ருமள வைக்கண்\nகொடியா அடுபுள் ளுயர்த்த வடிவார் மாதவ னாரே.
Verse 70
மாதவன் பால்சட கோபன் தீதவ மின்றி யுரைத்த\nஏதமி லாயிரத் திப்பத்து ஓதவல் லார்பிற வாரே.
Verse 71
பிறவித்துயரற ஞானத்துள் நின்று,\nதுறவிச்சு டர்விளக்கம் தலைப்பெய்வார்,\nஅறவனை யாழிப்படை யந்தணனை,\nமறவியை யின்றி மனத்துவைப் பாரே.
Verse 72
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்\nதுப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,\nஎப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,\nஅப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.
Verse 73
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,\nமாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,\nதூய அமுதைப் பருகிப்பருகி, என்\nமாயப் பிறவி மயர்வறுத் தேனே.
Verse 74
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,\nஉயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,\nஅயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்\nஇசைவினையென்சொல்லி யான்விடுவேனே.
Verse 75
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,\nநடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,\nதொடுவேசெய்திள ஆய்ச் சியர்க்கண்ணினுள்,\nவிடவேசெய்து விழிக்கும்பிரானையே.
Verse 76
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்\nவிராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,\nமராமரமெய்த மாயவன், என்னுள்\nஇரானெனில்பின்னை யானொட்டுவேனோ.
Verse 77
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,\nதானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,\nஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்\nவானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே.
Verse 78
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்\nதன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,\nபின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,\nமுன்னை யமரர் முழுமுத லானே.
Verse 79
அமரர் முழுமுத லாகிய ஆதியை,\nஅமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,\nஅமர அழும்பத் துழாவியென் னாவி,\nஅமரர்த் தழுவிற் றினிய கலுமோ.
Verse 80
அகலில் அகலும் அணுகில் அணுகும்,\nபுகலு மரியன் பொருவல்ல னெம்மான்,\nநிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,\nபகலு மிரவும் படிந்து குடைந்தே.
Verse 81
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,\nஅடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,\nமிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,\nஉடைந்து நோய்களை யோடு விக்குமே.
Verse 82
ஓடும்புள்ளேறி, சூடும தண்டுழாய்,\nநீடு நின்றவை, ஆடும் அம்மானே.
Verse 83
அம்மானாய்ப் பின்னும், எம்மாண புமானான,\nவெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே.
Verse 84
கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,\nதண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே.
Verse 85
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,\nநிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.
Verse 86
வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,\nபொய்கலவாது, என் - மெய்கலந்தானே.
Verse 87
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,\nபுலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே.
Verse 88
கொண்டா னேழ்வி டை, உண்டா னேழ்வையம்,\nதண்டா மஞ்செய்து, என் எண்டா னானானே.
Verse 89
ஆனா னானாயன், மீனோ டேனமும்,\nதானா னானென்னில், தானா யசங்கே.
Verse 90
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,\nஎங்கும் தானாய, நங்கள் நாதனே.
Verse 91
நாதன்ஞாலங்கொள் பாதன்,என்னம்மான்,\nஓதம் போல்கிளர், வேதநீரனே.
Verse 92
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,\nநெர்த லாயிரத்து, ஓர்தலிவையே.
Verse 93
இவையும் அவையும உவையம் இவரும் அவரும் உவரும்\nஎவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்\nஅவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்\nசுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே.
Verse 94
சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை\nகேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,\nவேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்\nஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென னருகலி லானே.
Verse 95
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,\nகருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரைக் கண்ணன்,\nபொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,\nஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே.
Verse 96
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்\nமடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,\nஉடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,\nகடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே.
Verse 97
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,\nசெக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,\nநக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,\nஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே.
Verse 98
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அஃதே,\nகாயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,\nசேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,\nதூயன் துயக் கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
Verse 99
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,\nதாளிணைமேலும்பு னைந்த தண்ணந்துழாயுடையம்மான்\nகேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,\nநாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
Verse 100
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,\nஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,\nபூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,\nகாவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே.
Verse 101
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,\nஅமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,\nகமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி\nஅமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.
Verse 102
நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,\nகற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,\nஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,\nமற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.
Verse 103
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,\nஇச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,\nஇச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,\nநிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபெருமே.
Verse 104
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,\nதிருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,\nஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்\nகருமாணிக்கமென் கண்ணுளதாகுமே.
Verse 105
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,\nஎண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்?\nமண்ணும்நீரு மெரியும் நல்வாயுவும்,\nவிண்ணுமாய்விரியு மெம்பிரானையே.
Verse 106
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்\nதம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,\nகொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,\nஎம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே.
Verse 107
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்\nஎன்செய்யோம், இனியென்னகுறைவினம்?\nமைந்தனை மலராள்மணவாளனை,\nதுஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய்.
Verse 108
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்\nஎண்டானுமின்றியே வந்தியலுமாறு,\nஉண்டானையுலகேழு மோர்மூவடி\nகொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே.
Verse 109
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,\nநோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,\nதாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,\nவாயுமீசன் மணிவண்ணனெந்தையே.
Verse 110
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,\nசிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,\nஎந்தையெம்பெருமானென்று வானவர்,\nசிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வ னையே.
Verse 111
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,\nமல்கும்கண்பனி நாடுவன்மாயமே,\nஅல்லும்நன்பகலு மிடைவீடின்றி,\nநல்கியென்னை விடான்நம்பி நம்பியே.
Verse 112
நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்\nசெம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,\nஉம்பர்வானவ ராதியஞ்சோதியை,\nஎம்பிரானையென் சொல்லிமறப்பனோ.
Verse 113
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,\nமறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு,\nமறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,\nமறப்பனோவினி யானென்மணியையே?
Verse 114
மணியை, வானவர் கண்ணனை, தன்னது ஓர்\nஅணியை, தென் குருகூர் கடகோபன் சொல்\nபணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்\nதணிவிலர் கற்பரேல், கல்வி வாயுமே.
Verse 115
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,\nஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,\nநோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,\nநீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.
Verse 116
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,\nசேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,\nஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,\nதாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.
Verse 117
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,\nநீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்\nதீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,\nயாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே
Verse 118
கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,\nசுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,\nஅடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,\nஉடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே.
Verse 119
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,\nதோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,\nவாழியவானமே, நீயும் மதுசூதன்,\nபாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே
Verse 120
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,\nமைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,\nஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,\nமெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.
Verse 121
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு\nஎம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,\nவேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,\nமாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே.
Verse 122
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,\nமருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,\nஉருளும்சகடம் உதைத்தபெருமானார்,\nஅருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.
Verse 123
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,\nநந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,\nசெந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,\nஅந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.
Verse 124
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,\nஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,\nமாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,\nமூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே
Verse 125
சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,\nஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,\nஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,\nசோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.
Verse 126
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,\nஎண்ணின்மீதிய னெம்பெருமான்,\nமண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,\nநங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.
Verse 127
ஏபாவம்,பரமே, யேழுலகும்,\nஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,\nமாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,\nகோபாலகோளரி யேறன்றியே.
Verse 128
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,\nவேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,\nமேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,\nமால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.
Verse 129
தேவுமெப் பொருளும்படைக்க,\nபூவில்நான் முகனைப்படைத்த,\nதேவனெம் பெருமானுக்கல்லால்,\nபூவும்பூசனையும் தகுமே.
Verse 130
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,\nமிகும்தேவு மெப்பொருளும்படைக்க,\nதகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,\nமிகும்சோதி மேலறிவார்யவரே.
Verse 131
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,\nகவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,\nபவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,\nஅவரெம் ஆழியம் பள்ளியாரே.
Verse 132
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,\nவள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,\nஉள்ளுளா ரறிவார் அவன்றன்,\nகள்ளமாய மனக்கருத்தே.
Verse 133
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,\nவருத்தித்தமர்யப் பிரானையன்றி,\nஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்\nதம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.
Verse 134
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,\nசேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,\nவாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,\nஆக்கினான் தெய்வவுலகுகளே.
Verse 135
கள்வா எம்மையு மேழுலகும்,\nநின் னுள்ளேதோற்றிய இறைவா என்று,\nவெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,\nபுள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே.
Verse 136
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்\nகூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,\nவாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,\nஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே.
Verse 137
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,\nவானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,\nதானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,\nதேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே
Verse 138
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,\nஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற\nஅத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,\nஅத்தா, நீ செய்தன அடியேனறியேனே.
Verse 139
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,\nஅறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,\nஅறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,\nஅறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே.
Verse 140
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,\nஎனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,\nஎனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,\nஎனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே.
Verse 141
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,\nகனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,\nதனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,\nநுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே.
Verse 142
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,\nதீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,\nசோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்\nகீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
Verse 143
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,\nபன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,\nகன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,\nநின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே.
Verse 144
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,\nகிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,\nஉறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,\nநெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே
Verse 145
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,\nபடிவான்மிறந்த பரமன்பவித் திரன்சீர்,\nசெடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,\nஅடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.
Verse 146
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,\nஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,\nதுளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,\nஅளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.
Verse 147
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,\nகுழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,\nகுழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,\nகுழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே.
Verse 148
ஆடியாடி யகம்கரைந்து, இசை\nபாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்\nநாடிநாடி நரசிங்காவென்று,\nவாடிவாடு மிவ்வாணுதலெ.
Verse 149
வாணுதலிம்மடவரல், உம்மைக்\nகாணுமாசையுள் நைகின்றாள், விறல்\nவாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்\nகாண நீரிரக்கமிலீரே.
Verse 150
இரக்கமனத்தோ டெரியணை,\nஅரக்குமெழுகு மொக்குமிவள்,\nஇரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,\nஅரக்கனிலங்கை செற்றீருக்கே.
Verse 151
இலங்கைசெற்றவனே! என்னும், பின்னும்\nவலங்கொள்புள்ளுயர்த்தாய்! என்னும், உள்ளம்\nமலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்\nகலங்கிக்கைதொழும் நின்றிவளே.
Verse 152
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன\nகுவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு\nதிவளும்தண்ணந் துழாய்கொடீர், என\nதவளவண்ணர் தகவுகளே.
Verse 153
தகவுடையவனே யென்னும், பின்னும்\nமிகவிரும்பும்பிரான் என்னும், என\nதகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்\nஉகவுருகி நின்றுள்ளுளே.
Verse 154
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என\nவள்ளலே கண்ணனேயென்னும், பின்னும்\nவெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்\nகள்விதான்பட்ட வஞ்சனையே.
Verse 155
வஞ்சனே, என்னும் கைதொழும், தன்\nநெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்\nகஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்\nதஞ்சமென்றிவள் பட்டனவே.
Verse 156
பட்டபோதெழு போதறியாள், விரை\nமட்டலர்தண்துழாய் என்னும், சுடர்\nவட்டவாய்நுதி நேமியீர், நும\nதிட்டமென்கொ லிவ்வேழைக்கே.
Verse 157
ஏழைபேதை யிராப்பகல், தன\nகேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்\nவாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்\nமாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
Verse 158
வாட்டமில்புகழ் வாமனனை, இசை\nகூட்டிவண்சடகோபன் சொல், அமை\nபாட்டோராயிரத்திப் பத்தால், அடி\nகுட்டலாகு மந்தாமமே.
Verse 159
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,\nஅந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,\nசெந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,\nசெந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே.
Verse 160
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,\nதிருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,\nஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,\nஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே
Verse 161
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,\nமின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,\nமன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,\nதன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே
Verse 162
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,\nஅப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,\nஎப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,\nஅப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே.
Verse 163
ஆராவமுதமர் யல்லாவியுள்கலந்த,\nகாரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,\nநேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,\nபேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.
Verse 164
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,\nபலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,\nபலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,\nபலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ.
Verse 165
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,\nகாம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,\nதேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,\nபூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.
Verse 166
பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,\nதன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,\nஎன்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,\nசொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.
Verse 167
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,\nஎல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,\nநல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,\nஅல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.
Verse 168
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,\nகாணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,\nபேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,\nகோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.
Verse 169
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,\nகூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,\nகூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,\nகூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே.
Verse 170
வைகுந்தாமணிவண்ணனே, என்போல்லாத்திருக்குறளா,\nஎன்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,\nசெய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்\nசெய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே.
Verse 171
சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்\nஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,\nமிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்\nபக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.
Verse 172
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்\nபூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,\nநாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்\nபாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே.
Verse 173
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,\nதெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்,\nவெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து\nஉள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே
Verse 174
உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ்செய்துஉன்\nதந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,\nஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,\nசிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.
Verse 175
உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்\nமுன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,\nஉன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்\nமுன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?
Verse 176
முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் உகந்துவந்து\nஅடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி \nசெடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் \nவிடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே.
Verse 177
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி\nஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,\nபாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்\nறேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்
Verse 178
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய், மராமரம்\nபைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா!\nகொந்தார்தண்ணந்துழாயினாயமுதே! உன்னையென்னுள்ளே குழைத்தவெம்\nமைந்தா!வானேறே, இனியெங்குப்போகின்றதே?
Verse 179
போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி\nராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,\nபாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட\nமேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.
Verse 180
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்\nநண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,\nஎண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,\nபண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.
Verse 181
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,\nமாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,\nஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்\nவிண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே
Verse 182
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,\nகாரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,\nசீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,\nவாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே.
Verse 183
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,\nயாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,\nதீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,\nகோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே
Verse 184
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து\nதேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்\nபாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,\nமேவும்தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான்விட்டுவே.
Verse 185
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,\nவிட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,\nவிட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,\nவிட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.
Verse 186
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,\nதுதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,\nஎதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,\nவிதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.
Verse 187
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்\nஉருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று,\nஉள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,\nமருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே
Verse 188
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்\nகாமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,\nதூமனத்தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்\nதீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே.
Verse 189
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்\nவெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து\nமரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்\nஇரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே.
Verse 190
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,\nமுருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,\nதெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,\nமருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே
Verse 191
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,\nஎற்பரனென்னையாக்கிக் ¦ காண்டெனக்கேதன்னைத்தந்த\nகற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்\nவெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே.
Verse 192
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,\nஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,\nதாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,\nஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.
Verse 193
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,\nகண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,\nபண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,\nபண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.
Verse 194
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்\nபுணர்வது, இருவரவர்முதலும் தானே,\nஇணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,\nபுணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே.
Verse 195
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,\nநீந்தும் துயரில்லா வீடுமுதலாம்,\nபூந்தண்புனல்பொய்கை யானைஇடர்க்கடிந்த,\nபூந்தண்துழாயென் தனிநாயகன் புணர்ப்பே.
Verse 196
புணர்க்குமயனா மழிக்குமரனாம்,\nபுணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,\nபுணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,\nபுணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே.
Verse 197
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,\nநலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,\nஅலமந்துவீய வசுரரைச்செற்றான்,\nபலமுந்துசீரில் படிமினோவாதே.
Verse 198
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,\nமூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,\nமாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,\nதேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே.
Verse 199
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,\nசேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,\nபார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,\nபேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?
Verse 200
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்\nகிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,\nதடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்\nமடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.
Verse 201
காண்பாரா ரெம்மீசன் கண்ணனை யென்காணுமாறு,\nஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றாற்றா,\nசேண்பால வீடோ வுயிரோமற்றெப் பொருட்கும்,\nஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.
Verse 202
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,\nஇங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,\nஅங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்\nசிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே.
Verse 203
சீர்மை கொள்வீடு சுவர்க்க நரகீறா,\nஈர்மை கொள்தேவர் நடுவாமற்றெப் பொருட்கும்,\nவேர்முதலாய் வித்தாய்ப் பரந்துதனிநின்ற,\nகார்முகில் போல்வண்ணனென் கண்ணனை நான்கண்டேனே.
Verse 204
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை,\nவண்ட லம்பும்சோலை வழுதி வளநாடன்,\nபண்டலையில் சொன்னதமி ழாயிரத்திப்பத்தும் வல்லார்,\nவிண்டலை யில்வீற்றிருந் தாள்வரெம் மாவீடே
Verse 205
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்\nசெம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,\nகைம்மாதுன்பம் கடிந்தபிரானே,\nஅம்மாவடியென் வேண்டுவதீதே.
Verse 206
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்\nமைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,\nஎய்தாநின்கழல் யானெய்த, ஞானக்\nகைதா காலக்கழிவுசெய்யேலே.
Verse 207
செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்\nகையார்ச்சக்கரக் கண்ணபிரானே,\nஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்\nஎய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.
Verse 208
எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்\nமனக்கே வந்திடை வீடின்றி மன்னி,\nதனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,\nஎனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
Verse 209
சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,\nஇறப்பிலெய்துக வெய்தற்க, யானும்\nபிறப்பில் பல்பிறவிப் பெருமானை,\nமறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.
Verse 210
மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,\nமகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,\nமகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்\nமகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.
Verse 211
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,\nபேராதேயான் வந்தடையும்படி\nதாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்\nஆராதாய், எனக்கென்றுமெக்காலே.
Verse 212
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்\nறெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,\nமிக்கார்வேத விமலர்விழுங்கும், என்\nஅக்காரக்கனியே, உன்னையானே.
Verse 213
யானேயென்னை அறியகிலாதே,\nயானேயென்தனதே யென்றிருந்தேன்,\nயானேநீயென் னுடைமையும்நீயே,\nவானேயேத்து மெம்வானவரேறே.
Verse 214
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,\nநீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,\nதேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,\nவேறேபோக எஞ்ஞான்றும்விடலே.
Verse 215
விடலில் சக்கரத் தண்ணலை,மேவல்\nவிடலில் வண்குருகூர்ச் சடகோபன்சொல்,\nகெடலி லாயிரத்துள் ளிவைபத்தும்,\nகெடலில் வீடுசெய்யும் கிளர்வார்க்கே.
Verse 216
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,\nவளரொளிமாயோன் மருவியகோயில்,\nவளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,\nதளர்விலராகில் சார்வதுசதிரே.
Verse 217
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,\nஅதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,\nமதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,\nபதியதுவேத்தி யெழுவதுபயனே.
Verse 218
பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே \nபுயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் \nமயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை \nஅயன்மலையடைவது அதுகருமமே.
Verse 219
கரும வன் பாசம் கழித்து உர்ன்று உய்யவே,\nபெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்\nவரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்\nதிருமலை அதுவே, அடைவது திறமே.
Verse 220
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது \nஅறமுயலாழிப் படையவன் கோயில் \nமறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை \nபுறமலைசாரப் போவதுகிறியே.
Verse 221
கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே \nஉறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் \nமறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை \nநெறிபடவதுவே நினைவதுநலமே.
Verse 222
நலமெனநினைமின் நரகழுந்தாதே \nநிலமுனமிடத்தான் நீடுறைகோயில் \nமலமறுமதிசேர் மாலிருஞ்சோலை \nவலமுறையெய்தி மருவுதல்வலமே.
Verse 223
வலஞ்செய்து, வைகல் வலம் கழியாதே,\nவலஞ்செய்யும் ஆய – மாயவன் கோயில்,\nவலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை,\nவலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.
Verse 224
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது\nஅழக்கொடி அட்டான் அமர்பெரும் கோயில்\nமழக்களிற்றினம் சேர் மாலிரும் சோலை\nதொழக் கருதுவது துணிவது சூதே.
Verse 225
சூது என்று களவும் சூதும் செய்யாதே,\nவேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்,\nமாது உறு மயில் சேர் மாலிருஞ் சோலைப்\nபோது அவிழ் மலையே, புகுவது பொருளே.
Verse 226
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்\nமருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்\nதெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து\nஅருளுடையவன் – தாள் அணைவிக்கும் முடித்தே.
Verse 227
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,\nஅடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,\nபடிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்\nகடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.
Verse 228
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,\nகட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,\nஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,\nபட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.
Verse 229
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்\nபரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,\nபரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்\nபரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே.
Verse 230
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,\nநின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க\nமாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்\nமாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே.
Verse 231
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,\nவருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,\nவருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை\nஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே?
Verse 232
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,\nசாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,\nபோதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்\nமாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?
Verse 233
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,\nமூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்\nகேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,\nசூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே?
Verse 234
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,\nமாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,\nமாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,\nமாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே?
Verse 235
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,\nதொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,\nமழுங்காத ஞானமே படையாக, மலருலகில்\nதொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
Verse 236
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,\nமுறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,\nபிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்\nஇறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே?
Verse 237
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,\nசயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,\nதுயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.
Verse 238
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,\nஅந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,\nவெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,\nஎந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?
Verse 239
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்\nபன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,\nதொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,\nநின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ?
Verse 240
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,\nஎல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,\nபொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,\nசொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.
Verse 241
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்\nஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,\nதாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்\nவாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே!
Verse 242
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,\nசிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,\nகொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த\nஎந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?
Verse 243
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,\nஅற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,\nபற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்\nநற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
Verse 244
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே\nமெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,\nஎஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,\nமெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே?
Verse 245
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,\nஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,\nபாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,\nகூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?
Verse 246
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று\nபாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,\nமேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,\nதாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?
Verse 247
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,\nஅலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,\nகலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,\nநிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே.
Verse 248
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,\nகுயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,\nசெயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே.
Verse 249
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,\nவழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,\nதெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,\nஎழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.
Verse 250
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்\nமுந்தை, வானவர் வானவர் கோனொடும்,\nசிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,\nஅந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.
Verse 251
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்\nகண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,\nதெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,\nஎண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.
Verse 252
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது\nதேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,\nநீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்\nபாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
Verse 253
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,\nஆதி மூர்த்தியென் றாலள வகுமோ?,\nவேதி யர்முழு வேதத் தமுதத்தை,\nதீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.
Verse 254
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,\nதாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,\nவேங்க டத்துறை வார்க்கு நமவென்ன\nலாங்க டமை,அதுசுமந் தார்க்கட்கே.
Verse 255
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,\nஅமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,\nநமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,\nசமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.
Verse 256
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,\nஅன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்\nசென்று சேர்திரு வேங்கட மாமலை,\nஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
Verse 257
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,\nவீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்\nதாயன், நாண்மல ராமடித் தாமரை,\nவாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.
Verse 258
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,\nஎய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,\nபைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,\nமொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.
Verse 259
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,\nநீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nகேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nவாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.
Verse 260
புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ \nதிகழுந்தண்பரவையென்கோ தீயென்கோவாயுவென்கோ\nநிகழுமாகசமென்கோ நீள்சுடரிரண்டு மென்கோ\nஇகழ்விலிவ்வனைத்துமென்கே கண்ணனைக்கூவுமாறே.
Verse 261
கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,\nமேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,\nநாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,\nபாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.
Verse 262
பங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,\nஅங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,\nசெங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ,\nசங்குசக் கரத்தன் என்கோ சாதிமா ணிக்கத் தையே.
Verse 263
சாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,\nசாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,\nஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,\nஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.
Verse 264
அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,\nநச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,\nஅச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,\nநெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.
Verse 265
பாலென்கோ நான்குவேதப்பயனென்கோ சமயநீதி\nநூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ இவற்றுள்நல்ல\nமேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ சண்ணனென்கோ\nமாலென்கோமாயனென்கோ வானவராதியையே.
Verse 266
வானவராதியென்கோ வானவர்தெய்வமென்கோ\nவானவர்போகமென்கோ வானவர்முற்றுமென்கோ\nஊனமில்செல்வமென்கோ ஊனமில்சுவர்க்கமென்கோ\nஊனமில்மோக்கமென்கோ ஒளிமணிவண்ணனையே
Verse 267
ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற\nநளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,\nஅளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,\nகளிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.
Verse 268
கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,\nஅண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,\nநண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,\nஎண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.
Verse 269
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,\nதோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\nஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,\nபாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.
Verse 270
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை\nமாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,\nபாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,\nவீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே
Verse 271
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,\nகைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,\nஎம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,\nதம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே.
Verse 272
தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,\nதிண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை,\nபண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார்,\nமண்கொள் உலகில் பிறப்பார் வல்வி னை மோத மலைந்தே.
Verse 273
மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை,\nதொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,\nதலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வ ¡தார்,\nஅலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே.
Verse 274
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,\nசெம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,\nகும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,\nதம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?
Verse 275
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு,\nஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த,\nவேத முதல்வ னைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார்,\nஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே?
Verse 276
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த,\nதனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை,\nகனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை,\nமுனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே.
Verse 277
நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்¦ சய்து நின்று,\nபார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி.\nநீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே,\nஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே?
Verse 278
வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை,\nபேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற,\nஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி,\nஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.
Verse 279
அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை,\nஅமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக,\nஅமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம்,\nஅமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே.
Verse 280
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை,\nதிருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை,\nஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி,\nபெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.
Verse 281
தீர்ந்த அடியவர் தம்மைத்திருத் திப் பணிகொள்ள வல்ல,\nஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,\nவாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,\nநேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே.
Verse 282
செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர்,\nவையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,\nசெய்ய சூழ்சு டர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும்,\nமொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே.
Verse 283
மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை,\nசாவ முள்ளன நீக்கு வ ¡னைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத்,\nதேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை,\nபாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ.
Verse 284
பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை,\nகுரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,\nஅரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை,\nஇரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ.
Verse 285
வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை\nஎம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும்,\nவானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,\nசெம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.
Verse 286
திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல்,\nஎரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய்,\nகரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,\nசுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே.
Verse 287
தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,\nசீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,\nநாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்\nஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.
Verse 288
எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர்,\nகெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,\nவிழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை,\nதொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே.
Verse 289
துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய்,\nஉயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,\nஅயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை,\nதயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே.
Verse 290
தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய்,\nஎஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை,\nஅஞ்சி நீருல கத்துள் ளீர்கள் அவனி வனென்று கூழேன்மின்,\nநெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.
Verse 291
கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர்\nபடவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,\nஅடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர்\nகடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே?
Verse 292
கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய்,\nமண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை,\nபண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல்,\nபண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே.
Verse 293
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,\nபயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,\nபயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,\nபயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.
Verse 294
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,\nதோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை\nதாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,\nநாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே.
Verse 295
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்போ\nதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை\nபாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்,\nஓதும் பிறப்பி டை தோறெம்மை யாளுடை யார்களே.
Verse 296
உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்பு\nடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்,\nநடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர்,\nஇடையார் பிறப்பி டைதோறெமக் கெம்பெரு மக்களே.
Verse 297
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட்க\nருமை யொழிய அன்றாரமு தூட்டிய அப்பனை,\nபெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர்,\nவருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே.
Verse 298
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை,\nதுளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை,\nஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர்,\nசலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே.
Verse 299
சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய்,\nதன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்அப்பனை,\nதொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர்,\nநம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே.
Verse 300
நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை,\nஉம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக்,\nகும்பிநரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர்,\nஎம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே.
Verse 301
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை\nநலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,\nவலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்\nகலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.
Verse 302
அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும்,\nபடியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு,\nஅடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக்\nகடியார் அடியார் தம்,அடியாரடி யோங்களே.
Verse 303
அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த\nநெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்,\nஅடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல்\nமுடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே.
Verse 304
முடியானே மூவுலகும் தொழுதேத் தும்சீர்\nஅடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய் புள்ளூர்\nகொடியானே, கொண்டல்வண் ணா அண்டத் தும்பரில்\nநெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.
Verse 305
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்\nதஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற\nநஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே,\nஎன்னுமெப் போதுமென் வாசகமே.
Verse 306
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்\nநாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,\nவேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்\nதாயவனே, என்று தடவுமென் கைகளே.
Verse 307
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,\nவைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,\nபைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை\nமெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.
Verse 308
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,\nமண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,\nபண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,\nதிண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.
Verse 309
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்\nகவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,\nபுவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன் னையே\nஅவிவின்றி யாதரிக் கும்என தாவியே.
Verse 310
ஆவியே, ஆரமுதே என்னை ஆளுடை,\nதூவியம் புள்ளுடை யாய்! சுடர் நேமியாய்!\nபாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்,\nகூவியும் காணப் பெறேனுன கோலமே.
Verse 311
கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன\nநீலமே,நின்றென தாவியை யீர்கின்ற சீலமே,\nசென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே,\nஉன்னையெந் நாள்கண்டு கொள்வனே?
Verse 312
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற\nகள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை\nஉள்வன்மை தீர,ஓராயிரம் தோள்துணித்த\nபுள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?
Verse 313
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்\nபெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,\nவருந்திநான் வாசக மாலை¦ காண்டு உன்னையே\nஇருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே.
Verse 314
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,\nநலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்\nவலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,\nஇலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.
Verse 315
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,\nஎன்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,\nதென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,\nஎன்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.
Verse 316
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்\nசெல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,\nகுளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,\nஉளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?
Verse 317
ஒழிவென்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்\nவழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற் கப்போய்,\nகழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,\nஇழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.
Verse 318
என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,\nமன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,\nமின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,\nதன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே.
Verse 319
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,\nவள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,\nகொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்\nவள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
Verse 320
வம்மின்புலவீர்! நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,\nஇம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,\nநும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்,\nசெம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே.
Verse 321
சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓராயிரம்\nபேரும் உடைய பிரானையல்லால் மற்று யான்கிலேன்,\nமாரியனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று ,\nபாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே.
Verse 322
வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,\nஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,\nகாயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,\nமாய மனிசரை என்சொல்லவல்லேனென் வய்கொண்டே?
Verse 323
வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,\nஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,\nசாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,\nநீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே.
Verse 324
நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,\nசென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,\nஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,\nஎன்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே?
Verse 325
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,\nஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,\nஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து\nஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே.
Verse 326
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில்,\nஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்\nவன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,\nநன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.
Verse 327
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண்,\nஉறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்,\nகறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான்,\nநிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே.
Verse 328
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,\nகட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,\nமட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்\nபட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.
Verse 329
பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம்\nசெற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய,\nபொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்\nதரியி னை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே.
Verse 330
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய,\nபடர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி,\nசுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை,\nஉடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே.
Verse 331
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற் கவே,\nதுயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து,\nதுயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான்,\nதுயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே.
Verse 332
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய்,\nஇன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்,\nமன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால்,\nஇன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே.
Verse 333
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன்,\nஅல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான்,\nஎல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய்,\nஎல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே.
Verse 334
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான்,\nமிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு,\nநக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள்\nஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே.
Verse 335
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய்,\nஅளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும்,\nவளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை,\nகிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே.
Verse 336
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,\nபாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன்\nநாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,\nவீடும்பெறுத் தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே.
Verse 337
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,\nகருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,\nபெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,\nதிருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.
Verse 338
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே\nதம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு\nவெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,\nசெம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.
Verse 339
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,\nஇடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,\nபொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென\nகடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.
Verse 340
நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,\nஎனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,\nமனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,\nபனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.
Verse 341
பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,\nஅணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,\nதுணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,\nமணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.
Verse 342
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,\nஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,\nவாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,\nஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
Verse 343
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,\nதூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,\nஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,\nகோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.
Verse 344
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,\nஇணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,\nமணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,\nபணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.
Verse 345
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,\nசெடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,\nகுடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,\nகொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
Verse 346
குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,\nஇறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,\nசிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,\nமறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே
Verse 347
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,\nகொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,\nசெய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,\nஅஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.
Verse 348
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,\nஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,\nதாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே\nமாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.
Verse 349
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,\nகொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,\nநல்லடி மேலணி நாறு துழாயென்றே\nசொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.
Verse 350
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,\nதேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற\nசேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே\nகூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.
Verse 351
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,\nபேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,\nபாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே\nஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே
Verse 352
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்\nகோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,\nதாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே\nநாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.
Verse 353
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,\nஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,\nபாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே\nஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே
Verse 354
மடந்தையை வண்கம லத்திரு மாதினை,\nதடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,\nவடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்\nமடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.
Verse 355
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்\nஅம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,\nவம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்\nநம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.
Verse 356
நங்கைமீர். நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,\nஎங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,\nசங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,\nஇங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?
Verse 357
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,\nஎன்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,\nமின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,\nபொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.
Verse 358
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,\nமலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nமலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.
Verse 359
கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்\nகோவை வீயச் சிலைகுனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்,\nபூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின்\nபூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே.
Verse 360
பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,\nவாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,\nதேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,\nஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே.
Verse 361
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி\nஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி,\nநாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன்\nஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே.
Verse 362
மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்\nமாய்த்த, ஆய மாயனே. வாமனனே மாதவா,\nபூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்\nபூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
Verse 363
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,\nஎண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,\nநண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,\nகண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே.
Verse 364
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,\nஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று,\nஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,\nகோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே.
Verse 365
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,\nகுரைக ழல்கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே,\nவிரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்\nஉரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே.
Verse 366
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,\nதுன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,\nஉன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்\nஇன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே?
Verse 367
உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்\nகரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன்,\nபுரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே,\nஇரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
Verse 368
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்\nதானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்,\nதேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப,\nயானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே.
Verse 369
உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்\nசெய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,\nபொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,\nவையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.
Verse 370
மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,\nவிண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,\nகண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே! என்\nபெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே?
Verse 371
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,\nசெய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,\nநையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்\nதெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.
Verse 372
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,\nஎறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,\nவெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற\nசெறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.
Verse 373
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்\nநின்றகுன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும்,\nநன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,\nஎன்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.
Verse 374
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,\nபோமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,\nஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,\nகோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.
Verse 375
கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,\nவாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,\nஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,\nபேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.
Verse 376
ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும்\nநீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும்,\nநாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும்,\nதேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே.
Verse 377
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,\nஉருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,\nகருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்\nவெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
Verse 378
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும்,\nகரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,\nபெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,\nஅரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
Verse 379
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,\nவியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,\nபெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,\nமயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.
Verse 380
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,\nசொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,\nநல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,\nதொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.
Verse 381
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,\nஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,\nபோற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,\nஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே?
Verse 382
மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,\nசெய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை\nமொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,\nவெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே.
Verse 383
வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,\nவீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,\nவீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,\nவீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
Verse 384
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,\nதூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,\nநாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,\nஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே.
Verse 385
ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்\nஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,\nமாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,\nகாற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே.
Verse 386
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,\nபெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,\nஉரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,\nஅரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?
Verse 387
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக் கார்களும், தன்றனக்\nகின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,\nகுன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,\nநன்று சூட்டும் விதியெய் தினம் என்ன குறைநமக்கே?
Verse 388
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்\nதமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை\nசுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா\nறமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே?
Verse 389
வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்\nதானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை,\nகூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக்\nகோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ?
Verse 390
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும்,\nகொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும்,\nகண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,\nவண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே.
Verse 391
மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை,\nவாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்,\nகாரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்,\nவேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே.
Verse 392
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,\nஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,\nபோர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்\nதேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே.
Verse 393
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,\nஇசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,\nதிசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்\nஇசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.
Verse 394
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர்\nஎதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்,\nமதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்,\nஅதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே
Verse 395
மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்\nகருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?\nஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,\nபெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.
Verse 396
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,\nகுவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,\nகவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,\nதவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே.
Verse 397
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,\nபிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,\nமணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,\nஅணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே
Verse 398
அணங்குக் கருமருந் தென்றங் கோர் ஆடும்கள் ளும்பராய்\nசுணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,\nஉணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?\nவணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே.
Verse 399
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்\nபாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்\nஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,\nகீத முழவிட்டு நீர்அணங் காடுதல் கீழ்மையே.
Verse 400
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,\nநாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,\nஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,\nஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
Verse 401
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,\nநும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,\nமன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி\nமன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.
Verse 402
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த\nவழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்\nவழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,\nதொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே.
Verse 403
சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,\nஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,\nகாலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்\nகோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே.
Verse 404
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என்\nவள்ள லேயோ வையங் கொண்ட வாமனாவோ என்றென்று,\nநள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்,\nகள்ள மாயா உன்னை யென்கண் காணவந் தீயாயே.
Verse 405
ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?\nதாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றென்று\nகூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,\nபாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே.
Verse 406
காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,\nஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,\nநாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,\nபேணிவானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே?
Verse 407
அப்பனே அடலாழியானே, ஆழ்கட லைக்கடைந்த\nதுப்பனே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,\nஎப்பொழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,\nஇப்போழுதே வந்திடாயென் றேழையேன் நோக்குவனே.
Verse 408
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே,\nநாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோறு மென்னுடைய,\nஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,\nநீக்க மின்றி யெங்கும் நின்றாய் நின்னை யறிந்தறிந்தே.
Verse 409
அறிந்து அறிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே,\nநிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து,\nபிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்\nநறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே.
Verse 410
கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல்,\nஎண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,\nதொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,\nவண்டு ழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.
Verse 411
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,\nகடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,\nமடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,\nதடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?
Verse 412
சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,\nபக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,\nமிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்\nதக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.
Verse 413
தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,\nகுழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்\nவழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,\nதழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே.
Verse 414
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,\nகூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,\nநீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,\nமாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.
Verse 415
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,\nஅணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,\nபணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,\nமணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே.
Verse 416
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,\nவிடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,\nபடநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,\nநெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.
Verse 417
நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை,\nபொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த,\nகறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை,\nசறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே.
Verse 418
தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,\nகிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,\nகளிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,\nஅளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.
Verse 419
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,\nநெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,\nகுறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,\nகிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.
Verse 420
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,\nகிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,\nவளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,\nவளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே.
Verse 421
வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை,\nஎரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த,\nதெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்,\nவிரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே.
Verse 422
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்,\nபோகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து,\nநாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க,\nயோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே.
Verse 423
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்,\nகிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த,\nதடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்,\nஉடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.
Verse 424
உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி,\nதயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன்,\nசெயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்\nவயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே.
Verse 425
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,\nஎண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?,\nகண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும்பரிசு,\nதண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
Verse 426
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,\nஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,\nஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,\nகூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
Verse 427
கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும்,\nவண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல்,\nகண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா அடியேனைப்\nபண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.
Verse 428
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,\nகொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?\nவள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,\nவள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.
Verse 429
வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும்,\nஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,\nஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?\nவாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே.
Verse 430
மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்,\nஅறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?\nவெறித்துளவ முடியானே வினையேனை யுனக்கடிமை\nஅறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே.
Verse 431
ஆயேயிவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்\nநீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,\nநோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,\nகூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே.
Verse 432
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,\nஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,\nகோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,\nகூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே?
Verse 433
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,\nஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,\nவேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,\nகூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.
Verse 434
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி\nகண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,\nஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,\nகண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே.
Verse 435
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,\nதிருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,\nதிருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,\nதிருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.
Verse 436
ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா\nஅன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான்,\nகுன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள்,\nநின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.
Verse 437
நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,\nவீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில்,\nமாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்,\nபாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே.
Verse 438
பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,\nகரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்,\nசிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள்,\nபரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே.
Verse 439
பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்\nநாயகனவனே கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின் \nதேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள் \nஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே?
Verse 440
இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் \nவலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான் \nமலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் \nபொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லைபோற்றுமினே.
Verse 441
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே\nதேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே,\nசேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள்,\nஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே.
Verse 442
ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,\nபாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,\nகூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,\nஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.
Verse 443
புக்கு அடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை\nநக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே\nகொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள்\nமிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே.
Verse 444
விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,\nஅளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,\nவளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,\nஉளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
Verse 445
உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,\nமறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே,\nசெறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள்\nகுறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.
Verse 446
ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்\nநாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்,\nவேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,\nமீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.
Verse 447
கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,\nபொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,\nமெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,\nஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.
Verse 448
போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே!\nதேனே இன்னமுதே! என்றென்றேசில கூற்றுச் சொல்ல,\nதானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,\nவானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே.
Verse 449
உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,\nவள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,\nகள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,\nவெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!
Verse 450
என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்,\nவன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து,\nநின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்,\nஎன்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே.
Verse 451
கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,\nநண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,\nதிண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,\nபுண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.
Verse 452
புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும்,\nமுறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன்,\nநிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண்,\nஅறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே.
Verse 453
அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்யானார்,\nஎம்மா பாவியர்க்கும்வி திவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,\nகைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே,\nமெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே.
Verse 454
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,\nமாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,\nசேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,\nமேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே.
Verse 455
ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்\nநாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,\nதேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,\nஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே.
Verse 456
ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,\nதானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,\nமீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,\nகானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.
Verse 457
கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,\nஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,\nசீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்\nஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.
Verse 458
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,\nநலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,\nகலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,\nமலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.
Verse 459
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்,\nதொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுதுநின் றார்த்தும்,\nவண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,\nபண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.
Verse 460
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து,\nபெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக,\nகரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,\nஇரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே.
Verse 461
இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைவன போல,\nதடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்\nகிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி,\nநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின் றனவே.
Verse 462
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே ஒக்கின்ற திவ்வுல கத்து,\nவைகுந்தன் பூதங்க ளேயாய் மாயத்தி னாலெங்கும் மன்னி,\nஐயமொன் றில்லை யரக்கர் அசுரர் பிறந்தீருள் ளீரேல்,\nஉய்யும் வகையில்லை தொண்டீர்! ஊழி பெயர்த்திடும் கொன்றே.
Verse 463
கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம்,\nநின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பி ரான்தமர் போந்தார்,\nநன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்,\nசென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நி றுத்தியே.
Verse 464
நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்க ளும்மையுய் யக்கொள்\nமறுத்து மவனோடே கண்டீர் மார்க்கண் டேயனும் கரியே\nகறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல் லால்தெய்வ மில்லை,\nஇறுப்பதெல் லாமவன் மூர்த்தி யாயவர்க் கேயி றுமினே.
Verse 465
இறுக்கு மிறையிறுத்துண்ண எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,\nநிறுத்தினான் தெய்வங்க ளாக அத்தெய்வ நாயகன் றானே\nமறுத்திரு மார்வன் அவன்றன் பூதங்கள் கீதங்கள் பாடி,\nவெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மி னீரே.
Verse 466
மேவித் தொழுதுய்ம்மி னீர்கள் வேதப் புனித இருக்கை,\nநாவிற்கொண் டச்சுதன் றன்னை ஞான விதிபிழை யாமே,\nபூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து\nமேவித் தொழுமடி யாரும் பகவரும் மிக்க துலகே.
Verse 467
மிக்க வுலகுகள் தோறும் மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,\nநக்கபி ரானோ டயனும் இந்திர னும்முதலாக,\nதொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்,\nஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே.
Verse 468
கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும்,\nமலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை,\nகலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன்,\nஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.
Verse 469
மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை\nஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,\nபாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,\nஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே?
Verse 470
என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை,\nஎன்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,\nமுன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,\nஎன்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே.
Verse 471
ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை\nசார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,\nபேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,\nதீர்ந்தவென் தோழீ என்செய்யு மூரவர் கவ்வையே?
Verse 472
ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,\nஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,\nபேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,\nகாரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.
Verse 473
கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட\nஅடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்\nகொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,\nதுடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமே?
Verse 474
என்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர்,\nஎன்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன்,\nமுன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி\nமன்னன், மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே.
Verse 475
வலையுள் அகப்பட்டுத் தென்னைநன் நெஞ்சம் கூவிக்கொண்டு,\nஅலைகடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான்தன்னை\nகலைகொள் அகலல்குல் தோழீ. நம்கண்க ளால்கண்டு\nதலையில் வணங்க மாங்கொலோ தையலார் முன்பே?
Verse 476
பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்\nபோய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,\nதூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,\nயாமுறு கின்றது தோழீ! அன்னையர் நாணவே?
Verse 477
நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,\nசேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,\nஆணையென்? தோழீ! உலகு தோறலர் தூற்றி,ஆம்\nகோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே.
Verse 478
யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,\nதூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,\nயாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,\nநாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.
Verse 479
இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,\nவிரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,\nநிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,\nஉரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம்.
Verse 480
ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,\nநீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,\nபாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,\nஆரெல்லே! வல்வி னையேன் ஆவிகாப் பாரினையே?
Verse 481
ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,\nமாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,\nகாவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,\nபாவியேன் நெஞ்சமே! நீயும்பாங் கல்லையே?
Verse 482
நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்,\nஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,\nகாயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,\nமாயும் வகையறியேன் வல்வி னையேன் பெண்பிறந்தே.
Verse 483
பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,\nஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம்\nமண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,\nஎண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே?
Verse 484
ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,\nநீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,\nகாரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,\nபேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.
Verse 485
பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,\nமுன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,\nமன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,\nஇந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே?
Verse 486
காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,\nசேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,\nதூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,\nதீப்பால வல்வி னையேன் தெய்வங்காள். என்செய்கேன்?
Verse 487
தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிர வேழ் ஊழியாய்,\nமெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்\nகைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,\nதைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே.
Verse 488
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,\nஅஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,\nசெஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,\nநெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
Verse 489
நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,\nசென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,\nஅன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,\nஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே.
Verse 490
உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,\nசிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nநிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,\nஇறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ?
Verse 491
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,\nநங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,\nசெங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே.
Verse 492
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே,\nதென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்\nமின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும்,\nமன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.
Verse 493
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nகுன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nவென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும்,\nநின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.
Verse 494
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர்,\nதேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nபூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும்,\nபாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.
Verse 495
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nதக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்\nதொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்,\nதக்கதாமரைக் கண்ணும் பாவியே னாவியின் மேலனவே.
Verse 496
மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்\nசோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nகோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்,\nநீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே.
Verse 497
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்\nசிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nநிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்\nநிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே.
Verse 498
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nமைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசெய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும்,\nமொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.
Verse 499
முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர்,\nமன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன்,\nகன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே.
Verse 500
கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள்,\nவழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nகுழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே,\nஎழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே.
Verse 501
அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,\nநறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,\nகுறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல்\nஅறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.
Verse 502
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்\nகடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,\nகடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்\nகடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,\nகடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்\nகடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,\nகடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nகடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?
Verse 503
கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்\nகற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,\nகற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்\nகற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,\nகற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்\nகற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,\nகற்கும் கல்வியீ ர்க் கிவையென் சொல்லுகேன்\nகற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே?
Verse 504
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,\nகாண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,\nகாண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?\nகாண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nகாண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே.
Verse 505
செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்\nசெய்வானின் றனகளும் யானே என்னும்,\nசெய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்\nசெய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,\nசெய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்\nசெய்யகம லக்கண்ண னேறக் கொலோ?\nசெய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nசெய்ய கனிவா யிளமான் திறத்தே.
Verse 506
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்\nதிறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,\nதிறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்\nதிறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,\nதிறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்\nதிறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?\nதிறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nதிறம்பா தென்திரு மகளெய் தினவே?
Verse 507
இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்\nஇனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,\nஇனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்\nஇனவாநிரை காத்தேனும் யானே என்னும்,\nஇனவாயர் தலைவனும் யானே என்னும்\nஇனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,\nஇனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்\nஇனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே?
Verse 508
உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்\nஉற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,\nஉற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்\nஉற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,\nஉற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்\nஉற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,\nஉற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்\nஉற்றென் னுடைப்பே தையுரைக் கின்றன வே.
Verse 509
உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்\nஉரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,\nஉரைக்கின்ற அமரரும் யானே என்னும்\nஉரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,\nஉரைக்கின்ற முனிவரும் யானே என்னும்\nஉரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,\nஉரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nஉரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?
Verse 510
கொடிய வினையாது மிலனே என்னும்\nகொடியவினை யாவேனும் யானே என்னும்,\nகொடியவினை செய்வேனும் யானே என்னும்\nகொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,\nகொடியா னிலங்கைசெற் றேனே என்னும்\nகொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,\nகொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nகொடியேன் கொடியென் மகள்கோ லங்களே?
Verse 511
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்\nகோலமில் நரகமும் யானே என்னும்,\nகோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்\nகோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,\nகோலங்கொள் தனிமுதல் யானே என்னும்\nகோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?\nகோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nகோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே.
Verse 512
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்\nகுலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை\nவாய்ந்த வழுதி நாடன் மன்னு\nகுருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,\nஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்\nஇவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்\nஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்\nஅடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.
Verse 513
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும்\nஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,\nசேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,\nவீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
Verse 514
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன் உன்னைக் காணும் அவாவில்\nவீழ்ந்து,நான் எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,\nதிங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,\nசங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.
Verse 515
கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா,\nபொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,\nதெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,\nஅருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.
Verse 516
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி,\nநீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,\nதேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,\nஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?
Verse 517
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,\nகைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,\nசெய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,\nகைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே.
Verse 518
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை,\nவானநா யகனே! மணிமா ணிக்கச் சுடரே,\nதேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை\nவான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே.
Verse 519
வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்\nமுந்தைத் தாய்தந்தையே! முழுஏழுலகு முண்டாய்,\nசெந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,\nஅந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.
Verse 520
அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன்,\nஅகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,\nபகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்\nபுகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே!
Verse 521
புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய். எருதேழ் அடர்த்த,என்\nகள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!\nதெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை,\nஉள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமா றெனக்கே.
Verse 522
ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர்கைம்\nமாறு நானொன் றிலேனென தாவியு முனதே,\nசேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை\nநாறு பூந்தண் துழாய்முடி யாய்! தெய்வ நாயகனே!
Verse 523
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,\nகொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்\nசெய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,\nவைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.
Verse 524
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,\nநீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,\nசீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,\nஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!
Verse 525
எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,\nஎம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,\nசெம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,\nஅம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.
Verse 526
என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்?\nஉன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்,\nகன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள்,\nசென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.
Verse 527
செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!\nஉலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!\nநலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்\nஅலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
Verse 528
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்,\nதழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்,\nசெழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!\nதொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
Verse 529
சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்\nஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?\nவாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!\nயாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!
Verse 530
அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,\nஎரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,\nபிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,\nதரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.
Verse 531
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்,\nவளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!\nதளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது,\nஇளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.
Verse 532
இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே!\nஅசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி!\nதிசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை,\nஅசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.
Verse 533
வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!\nஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,\nதீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை\nஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
Verse 534
உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,\nகழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,\nகுழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்\nமழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
Verse 535
மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய,\nவானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,\nதேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை,\nகோனாரை அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ?
Verse 536
என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?\nபொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,\nதென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்\nநின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே?
Verse 537
சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய,\nபாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,\nமாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்\nநீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே?
Verse 538
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?\nபச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,\nமச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்\nநச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே.
Verse 539
நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,\nமைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,\nகன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,\nஎன்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
Verse 540
காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,\nபாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,\nசேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,\nமாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே?
Verse 541
பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,\nஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,\nமாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,\nநாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே?
Verse 542
நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,\nஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,\nமாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,\nநீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே?
Verse 543
கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,\nகுழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,\nமழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,\nசுழலின் மலிசக்கரப் பெருமானது தால்லருளே?
Verse 544
தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,\nதொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,\nநல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,\nநல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே?
Verse 545
நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,\nசேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,\nநாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,\nசேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே.
Verse 546
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்\nதிறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,\nநிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச்\nசிறந்த வான்சுட ரே! உன்னை யென்றுகொல் சேர்வதுவே.
Verse 547
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்\nமதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது\nஉதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,\nமுதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?
Verse 548
பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தோர் சாடிறச்\nசெய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,\nநெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,\nபையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே.
Verse 549
கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும்,\nகலந்தசுரரை உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,\nவெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை\nவிளங்க நின்றதும், உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே.
Verse 550
உள்ளம் வானவர் கோனுக் காயர் ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,\nவண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,\nமண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து மணந்த மாயங்கள்,\nஎண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.
Verse 551
நின்றவாறு மிருந்த வாறும் கிடந்த வாறும் நினைப்பரியன\nஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,\nநின்று நின்று நினைக்கின் றேனுன்னை எங்ங னம்நினை கிற்பன்,பாவியேற்கு\nஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே.
Verse 552
ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும் உண்மையோ டின்மையாய் வந்து,என்\nகண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,\nஎண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய மாணிக்க மே.என் கண்கட்குத்\nதிண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே.
Verse 553
திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா மரைமேல்,திசைமுகன்\nகருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,\nபொருவி லுந் தனி நாயகமவை கேட்குந் தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,\nஅருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே.
Verse 554
அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்\nமுடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,\nநொடியு மாறவை கேட்குந் தோறுமென் நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,\nகொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?
Verse 555
கூடிநீரை கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண, அசுரரை\nவீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,\nஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடு கின்ற, நின்தன்னை\nநாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே.