Verse 1
மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த் தொண்டரடிப்பொடி தொன்னகரம், வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்து அம்மானைப், பள்ளி உணர்த்தும் பிரானுதித்த வூர்.
Verse 2
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் [TAB]கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் [TAB]வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த [TAB]இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் [TAB]அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 3
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் [TAB]கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் [TAB]ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய் [TAB]வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த [TAB]அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 4
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் [TAB]துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ [TAB]பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற [TAB]வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை [TAB]அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே.
Verse 5
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் [TAB]வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் [TAB]இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவ ரேறே [TAB]மாமுனி வேள்வியைக் காத்துஅவ பிரதம் ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே [TAB]அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 6
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் [TAB]போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி கலந்தது குணதிசை கனைகட லரவம் [TAB]களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் [TAB]அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் [TAB]எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 7
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ [TAB]இறையவர் பதினொரு விடையரு மிவரோ மருவிய மயிலின னறுமுக னிவனோ [TAB]மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி புரவியோ டாடலும் பாடலும் தேரும் [TAB]குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம் அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ [TAB]அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 8
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ [TAB]அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ இந்திர னானையும் தானும்வந் திவனோ [TAB]எம்பெரு மானுன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க [TAB]இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ [TAB]அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 9
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க [TAB]மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு [TAB]ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ [TAB]தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் [TAB]அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 10
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே [TAB]யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் [TAB]கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம் மாதவர் வானவர் சாரண ரியக்கர் [TAB]சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள [TAB]அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
Verse 11
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ [TAB]கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் [TAB]துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து [TAB]தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும் அடியனை அளியனென் றருளியுன் னடியார்க் [TAB]காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Thiruppalliyezhuchi — The Sacred Morning Awakening. It includes 11 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.