Verse 1
வாழி பரகாலன் வாழி கலிகன்றி\nவாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ-\nமாயோனை வாள் வலியால் மந்திரம்கொள் மங்கையர்-கோன்\nதூயோன் சுடர் மான வேல்.
Verse 2
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி\nநஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்\nஅஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்\nபஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
Verse 3
எங்கள்கதியே! இராமானுசமுனியே!\nசங்கைகெடுத்தாண்ட தவராசா\nபொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்\nதங்குமனம் நீயெனக்குத் தா.
Verse 4
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
Verse 5
ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா,\nபாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள்,\nதூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, \nஎன் நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.
Verse 6
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,\nஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,\nகாமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,\nநாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
Verse 7
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,\nநின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் என்செய்கேன் நெடுவிசும்பணவும்,\nபன்றியா யன்றுபாரகங்கீண்ட பாழியா னாழியானருளே,\nநன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
Verse 8
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் கண்டவாதிரிதந்தேனேலும்,\nதெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத்திருவருள்பெற்றேன்,\nஉள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர,\nநள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம்.
Verse 9
எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்\nஅம்பினல் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்,\nவம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி,\nநம்பிகாள்! உண்ண நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
Verse 10
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் இன்னதோர்த்தன்மையென்றுணரீர்\nகற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும்,\nசொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின்,\nநற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.
Verse 11
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,\nபெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,\nசெற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,\nநற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.
Verse 12
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,\nநிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,\nவலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,\nநலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
Verse 13
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,\nசெஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்\nதுஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,\nநஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.
Verse 14
வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று\nஏலநாறுதண் தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,\nஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,\nபீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 15
கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,\nஇலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,\nவிலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,\nபிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 16
துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்\nஇடிகொள் வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,\nகடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,\nபிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 17
மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்\nதிறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,\nஇறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,\nபிறங்குமாமணி யருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.
Verse 18
கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,\nஅரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,\nவரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,\nபிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 19
பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,\nஇணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,\nமணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,\nபிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே!
Verse 20
கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,\nபோர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,\nஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,\nபேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 21
இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,\nஅரவமா விக்குமகன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,\nபரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,\nபிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 22
ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,\nஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,\nதாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,\nபேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே.
Verse 23
கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று\nபெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,\nவரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,\nஅரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே.
Verse 24
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து\nஇற்றகால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,\nபெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை\nவற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.
Verse 25
முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,\nவிதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,\nஇதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,\nமதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
Verse 26
உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,\nநெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,\nஅறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,\nவெறிகொள்வண்டு பண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
Verse 27
பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி\nதாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,\nகாளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,\nவாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே.
Verse 28
பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்\nஉண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,\nதண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,\nவண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே.
Verse 29
எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்\nபித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்\nஅத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த\nமைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே.
Verse 30
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை\nயொப்ப ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,\nசெப்புநேர் மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,\nவைப்பும் நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.
Verse 31
ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்\nகூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,\nநாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,\nவாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே.
Verse 32
புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,\nகலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,\nஅலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,\nவலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே.
Verse 33
வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,\nகண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,\nகொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,\nஅண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே.
Verse 34
ஏனமுனாகி யிருநிலமிடந்து அன்றிணையடி யிமையவர்வணங்க,\nதானவனாகம் தரணியில்புரளத் தடஞ்சிலை குனித்தவெந்தலைவன்,\nதேனமர் சோலைக் கற்பகம்பயந்த தெய்வநன்னறு மலர்க்கொணர்ந்து,\nவானவர் வணங்கும்கங்கை யின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 35
கானிடையுருவைச் சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந் தொழிலுரவோன்,\nஊனுடையகலத்தடு கணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,\nதேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட பெருகு\nவானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 36
இலங்கையும் கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர்\nகுலங்களும் கெடமுன் கொடுந் தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,\nவிலங்கலிலுரிஞ் சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடி யெனவிரிந்து,\nவலந்தரு மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 37
துணிவினியுனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,\nபிணியொழித்தமரர்ப்பெரு விசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்,\nஅணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து,\nஅணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 38
பேயிடைக்கிருந்து வந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட பெற்ற\nதாயிடைக் கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,\nசேய்முகட்டுச் சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய் விலங்கலிலிலங்கு,\nவாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 39
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,\nபாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான்,\nகாரணந்தன்னால்கடும்புனல்கயத்தகருவரைபிளவெழக்குத்தி,\nவாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 40
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்,\nஇந்திரற்கருளி யெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான்,\nஅந்தரத்தமரரடி யிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி,\nமந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 41
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன்,\nஊன்முனிந்த வனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத்\nதான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த\nமாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 42
கொண்டல்மா ருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்,\nஉண்டமா வயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்,\nஅண்டமூடறுத் தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு\nமண்டுமா மணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
Verse 43
வருந்திரை மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,\nகருங்கடல் முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்,\nவரஞ்செய்த வைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி,\nஇருங்கடலுலக மாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே.
Verse 44
கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,\nசிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,\nமலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,\nதலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 45
கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,\nஉடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,\nஇடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,\nதடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 46
உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,\nநிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி வலவன்\nவானோர்த்தம்பெருமான்ம ருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்\nசலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 47
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,\nதேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,\nபேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற தாரான் \nதாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 48
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்\nவிடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்\nகடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்\nதடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 49
தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட வாயான் \nதூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை ஏயானிரப்ப \nமூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான்\nகாயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 50
ஏனோரஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,\nஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன்தானே யிருசுடராய்,\nவானாய்த் தீயாய்மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும் தானாய்\nதானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 51
வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்\nசந்தார் தலைகொண்டு லகேழும் திரியும் பெரியோந்தான்சென்று, என்\nஎந்தாய்! சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான்,\nசந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே!
Verse 52
தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்,\nஅண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,\nவண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,\nதண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே.
Verse 53
தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,\nகாரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,\nஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,\nபேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே.
Verse 54
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன்\nஅதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,\nஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், \nவந்துந்திருவடியடைந்தேன்நை மிசாரணியத்துளெந்தாய்
Verse 55
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,\nபுலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,\nஅலம்புரிதடக்கையாயனே மாயா! வானவர்க்கரசனே!\nவானோர் நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 56
சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,\nகாதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,\nவேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த, நாதனே\nவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 57
வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,\nநம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்ற எற்றிவைத்து, \nஎரியெழுகின்ற செம்பினாலியன்றபாவையைப் பாவீ ! தழுவெனமொழிவதர்க்கஞ்சி,\nநம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 58
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,\nநெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,\nகடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,\nநடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 59
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,\nஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால்,\nநமனார் பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல்கிடந்தாய்!,\nநாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்!
Verse 60
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,\nதுஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய!\nவஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா! தானவர்க்கென்றும் நஞ்சனே!,\nவந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 61
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?\nஐவர் கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா\nபாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து,\nஎன் நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 62
ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,\nதானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,\nதேனுடைக்கமலத்திருவினுக்கரசே.! திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்!,\nநானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
Verse 63
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று,\nஇமையோர்நா தன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத் தெந்தையைச்சிந்தையுள்வைத்து,\nகாதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,\nஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே.
Verse 64
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்\nபொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,\nபைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்\nசெங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
Verse 65
அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்\nகொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,\nமலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,\nசிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே.
Verse 66
ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்\nவாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,\nஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,\nதேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே.
Verse 67
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை\nவவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,\nகவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,\nதெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
Verse 68
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்\nபொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,\nநின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,\nசென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.
Verse 69
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,\nஇரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,\nநெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,\nதிரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
Verse 70
முனைத்தசீற்றம் விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,\nஅனைத்துமஞ் சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,\nகனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,\nதினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
Verse 71
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய்முறையால்\nஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,\nகாய்த்த வாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,\nதேய்த்த தீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே.
Verse 72
நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,\nஅல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,\nநெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்\nசில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.
Verse 73
செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,\nஎங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,\nமங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,\nசெங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே.
Verse 74
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,\nசங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,\nபொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்\nசெங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே.
Verse 75
பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,\nபிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,\nவெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்\nதெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 76
நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,\nஎன்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,\nகன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,\nசென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 77
பார்த்தற் காயன்றுபாரதம்கை செய்திட்டு வென்றபரஞ்சுடர்,\nகோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,\nஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்\nதீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 78
வண்கையான வுணர்க்குநாயகன் வேள்வியில் சென்றுமாணியாய்,\nமண்கையா லிரந்தான் மராமரமேழு மெய்தவலத்தினான்,\nஎண்கையா னிமயத்துள்ளான் இருஞ்சோலை மேவியவெம்பிரான்,\nதிண்கைம்மா துயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 79
எண்டிசைகளு மேழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,\nபண்டோரா லிலைப்பள்ளி கொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,\nஒண்டிறல வுணனுரத்துகிர் வைத்தவன் ஒள்ளெயிற்றொடு\nதிண்டிற லரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 80
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,\nபேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,\nகாரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,\nசேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 81
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்,\nவம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்,\nகொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,\nசெம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 82
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,\nபேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,\nவாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,\nதேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.
Verse 83
செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,\nமங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,\nசங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,\nவங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே.
Verse 84
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,\nநோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,\nவேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா,\nநாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே.
Verse 85
மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,\nநானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,\nதேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்\nஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 86
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,\nஎன்றேனு மிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,\nகுன்றேய் மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா!,\nஅன்றே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 87
குலந்தா னெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,\nநலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்,\nநிலம் தோய்நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா.,\nஅலந் தேன்வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
Verse 88
எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,\nதுப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,\nசெப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்\nஅப்பா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 89
மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,\nபுண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,\nவிண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா,\nஅண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 90
தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,\nபெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,\nகரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா!,\nஅரிய!. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 91
நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்ப தோராசையினால்,\nஏற்றேனிப் பிறப்பே யிடருற்றனனெம் பெருமான்!,\nகோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா!,\nஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
Verse 92
பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,\nமற்றேலொன்றறியேன் மாயனே! எங்கள்மாதவனே!,\nகல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா!,\nஅற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
Verse 93
கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,\nவிண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,\nதிண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,\nபண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே.
Verse 94
கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,\nதிண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,\nவிண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,\nஅண்ணா ! அடியேன் இடரைக்களையாயே.
Verse 95
இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்\nகுலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்!,\nவிலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய,\nஅலங்கல்துளபமுடியாய்! அருளாயே!
Verse 96
நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,\nஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!,\nசீரார் திருவேங்கடமாமலைமேய,\nஆராவமுதே!அடியேற்கருளாயே!
Verse 97
உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,\nகொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,\nவிண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய,\nஅண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!
Verse 98
தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,\nபேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,\nசேணார் திருவேங்கடமாமலைமேய,\nகோணாகணையாய! குறிக்கொள்ளெனைநீயே!
Verse 99
மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,\nதன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,\nமின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,\nஎன்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே!
Verse 100
மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,\nஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,\nதேனே. திருவேங்கடமாமலைமேய,\nகோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே.
Verse 101
சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன்\nமணிவாளொளி வெண்டரளங்கள்,\nவேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,\nஆயனடியல்லது மற்றறையேனே.
Verse 102
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,\nநந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,\nசிந்தாமணியே திருவேங்கடம்மேய எந்தாய்!\nஇனியானுன்னை யென்றும் விடேனே.
Verse 103
வில்லார்மலி வேங்கடமாமலைமேய,\nமல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,\nகல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,\nவல்லாரவர் வானவராகுவர்த்தாமே.
Verse 104
வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ\nமானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை,\nகானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்\nஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
Verse 105
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை,\nமண்மிசைப் பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,\nகுறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் \nவேங்கடத்து, அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே.
Verse 106
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும்,\nவானிடைக் கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,\nவண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், \nமீமிசை அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே.
Verse 107
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, \nமண்மிசை மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,\nகோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு,\nவானவர் ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.
Verse 108
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,\nதங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!\nஎங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,\nஅங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
Verse 109
துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,\nதமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,\nகவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,\nஅமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.
Verse 110
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை, \nமிடற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,\nமருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும்,\nவானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
Verse 111
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே,\nஎன் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே,\nவேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய,\nஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
Verse 112
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள்,\nபாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,\nஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,\nவேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே.
Verse 113
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய,\nஅன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,\nகன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த,\nஇம்மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே.
Verse 114
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,\nநாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,\nவேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று\nஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
Verse 115
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,\nபொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று\nசெய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,\nஎய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
Verse 116
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்\nமன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே\nபின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,\nஇன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே.
Verse 117
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,\nவெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,\nநந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,\nஎந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.
Verse 118
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,\nசால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,\nநீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,\nஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே.
Verse 119
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,\nஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,\nமூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-\nதேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
Verse 120
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்\nதங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்\nதொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,\nஎங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.
Verse 121
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த\nபுனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,\nதனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு\nஇனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.
Verse 122
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,\nவந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,\nஅந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,\nஇந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
Verse 123
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,\nவண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,\nகொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,\nஅண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே.
Verse 124
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,\nசெற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,\nபற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,\nசிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 125
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்,\nகோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும்,\nஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், \nமாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 126
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர,\nநஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை,\nவிஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி,\nஅஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 127
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய்,\nமந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, \nஆயர் அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன,\nஅந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 128
இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன்,\nதந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை,\nபஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை\nஎந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 129
அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று,\nஎந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன,\nசந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப,\nஇந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 130
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும்\nஇரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை,\nகுரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால,\nஇரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 131
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்,\nஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி,\nபிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,\nதெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 132
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,\nகானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,\nஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,\nதேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
Verse 133
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும் மண் டபமும்,\nதென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை,\nகன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி,\nசொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே.
Verse 134
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,\nஅவுணர்க்கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,\nஇரும்பொழில்சூழ் நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,\nநின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 135
காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,\nமுனே மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும் அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த் தாண்டான்,\nஅவுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து,\nஅரியாய்நீ ண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 136
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில்,\nபுலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில்,\nபலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு அணிசேர்\nநிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 137
தாங்காததோ ராளரி யாயவுணன் றனைவீட முனிந்தவ னாலமரும்,\nபூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,\nபாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,\nநீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 138
மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவ\nமதிசேர்கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,\nகாலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,\nநீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 139
பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், \nஎனக்காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,\nஅப்பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 140
புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,\nஅசுரன்ந கராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,\nபகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில்,\nநிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 141
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,\nஅங்ஙனே அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,\nநச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,\nநிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
Verse 142
பேசுமள வன்றிது வம்மின்நமர்! பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,\nநாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்\nவாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,\nமதியில் நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே!
Verse 143
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,\nஅமரில் கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,\nஉடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,\nகொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே.
Verse 144
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை,\nஎம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,\nபோரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,\nகாரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 145
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி மாண்டு,\nஅவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை,\nகணங்களேத்தும் நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,\nகாண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 146
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,\nஅன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்,\nதடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,\nகடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
Verse 147
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,\nஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை, \nகுடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை,\nஎம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 148
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம் ஏய்ந்தானை,\nஇலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,\nதோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை,\nஎம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 149
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே படர்ந்தானைப்,\nபடுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற இடந்தானை,\nவளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம் கடந்தானை,\nஎம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 150
பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,\nபூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை\nஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,\nகாணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
Verse 151
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,\nதண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,\nஎன்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட\nகண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 152
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை,\nதென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,\nபண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை,\nதொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
Verse 153
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,\nதடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,\nகடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,\nதிடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ.
Verse 154
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்\nபெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய\nதண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,\nஎண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே.
Verse 155
பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி,\nநீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர்,\nகார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்,\nஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே.
Verse 156
ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,\nவானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,\nகானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,\nஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே.
Verse 157
விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்\nகொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்\nகண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,\nகொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே.
Verse 158
பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,\nவிச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,\nகச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,\nநச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே.
Verse 159
புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்\nநலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,\nகலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,\nவலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே.
Verse 160
பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத\nவஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,\nகஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,\nநெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே.
Verse 161
செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால்,\nஉழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,\nகழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம்,\nதொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே.
Verse 162
பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,\nஇணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்\nகணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,\nவணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே.
Verse 163
கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,\nஅடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,\nவடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,\nமுடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே.
Verse 164
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த அவளும்,\nநின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால்,\nகுவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த இவளை,\nஉன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 165
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,\nகுளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,\nவளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,\nஇளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 166
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,\nபோந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,\nமாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா,\nஎன்தன் ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 167
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும்,\nஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம்,\nதோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும்,\nஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 168
ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் உருகும்நின் திருவுரு நினைந்து,\nகாதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,\nபேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,\nஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 169
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,\nவன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,\nமின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த,\nஎன்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 170
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,\nவளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்றுவாய் வெருவும்,\nகளங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த,\nஇளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 171
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,\nபுலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,\nகுலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,\nஇலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 172
பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள்,\nஅன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன்,\nமின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு,\nஎன்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
Verse 173
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய்,\nஎன்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை,\nமன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,\nபன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே!
Verse 174
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப,\nமுரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க,\nஎரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா,\nஅரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 175
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும்,\nசெந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,\nவந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த,\nஅந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 176
செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,\nஉம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே,\nவெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,\nஇருண்ட அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 177
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை யஞ்ச,\nஅதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,\nவெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து,\nஅஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 178
கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,\nமற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,\nநீண்ட மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற,\nஅலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 179
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார்\nசங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,\nதாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம்,\nஅங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 180
முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும்,\nமேனியஞ்சாந் திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,\nஎழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,\nஅழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 181
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை தேவி,\nஅப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,\nகாவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,\nஎன் ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 182
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,\nவஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,\nநஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன்\nஅஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
Verse 183
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்,\nதன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை,\nகன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,\nகுன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.
Verse 184
சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,\nநல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,\nபல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற் பல்லவன்,\nமல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 185
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,\nதன்னுந்தித் தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,\nதேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,\nபார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 186
உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,\nவரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி,\nநிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள்,\nபரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 187
அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன்,\nஎந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,\nவிண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,\nபண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 188
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,\nமுனநாள் பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,\nதேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,\nபாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 189
திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,\nபுண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,\nவெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,\nபண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 190
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,\nசலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,\nஉலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,\nபலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 191
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,\nமலை யால்கடலை அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,\nவிடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த,\nபடைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 192
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,\nமறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,\nகறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,\nபறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
Verse 193
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,\nகார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,\nசீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,\nஉலகில் தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே.
Verse 194
மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,\nஎஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,\nதுஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,\nசெஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 195
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,\nசந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,\nவந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,\nசிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே.
Verse 196
கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,\nஅழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,\nஎழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,\nசெழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 197
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,\nஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை,\nகோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு\nதீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 198
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,\nபிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,\nமறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,\nசிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 199
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,\nதறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,\nவெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு,\nசெல்வச் செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 200
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,\nவரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,\nகருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,\nசெருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 201
பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, \nபார்த்தன் செல்வத் தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,\nபோரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,\nசீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 202
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,\nகாவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,\nசேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,\nதீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
Verse 203
வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,\nசீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று\nவாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,\nகாரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.
Verse 204
இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,\nகருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல் அருந்தி,\nஇன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,\nசெருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே.
Verse 205
மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,\nபன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,\nபின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,\nதென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே.
Verse 206
வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன்,\nஅடியவர்க்கு மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,\nமொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,\nசெய்யதாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே.
Verse 207
மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,\nகூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,\nமிடைந்து சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,\nசேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே.
Verse 208
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து \nஆயர் பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் \nவேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி\nதேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே.
Verse 209
கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,\nகானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,\nவானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,\nதேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே.
Verse 210
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை மன்னன்,\nநீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,\nஅன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,\nசெந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே.
Verse 211
விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,\nநிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,\nவரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,\nதிரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே.
Verse 212
வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,\nமணித்தேர்க் கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,\nகால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,\nசேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே
Verse 213
மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,\nதேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,\nமேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,\nபாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே.
Verse 214
ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,\nதாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்\nகானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,\nதேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 215
காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்,\nஐந்து தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தை யுள்வைத்து மென்பீர்,\nவாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,\nதீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 216
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய்விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,\nவம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,\nபைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,\nசெம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 217
அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,\nபெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்!\nகருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,\nதிருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 218
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,\nதாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,\nபூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்\nசேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 219
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு\nமையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,\nஅவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக,\nசெவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 220
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,\nதெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்\nகௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,\nதெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 221
மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்\nகோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,\nமூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி,\nதேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 222
செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,\nஅருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,\nபெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,\nதிருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
Verse 223
சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,\nஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப அலைநீ ருலகுக் கருளே புரியும்,\nகாரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்,\nபாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே.
Verse 224
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,\nஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,\nகூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான்,\nசேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.
Verse 225
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால்,\nமாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண்\nபூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி,\nதேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 226
பண்டிவன் வெண்ணெயுண் டானென் றாய்ச்சியர் கூடி யிழிப்ப\nஎண்டிசை யோரும்வ ணங்க இணைமரு தூடு நடந்திட்டு,\nஅண்டரும் வானத் தவரு மாயிர நாமங்க ளோடு,\nதிண்டிறல் பாட வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 227
வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,\nதளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண,\nமுளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட,\nதிலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 228
பருவக் கருமுகி லொத்து முட்டுடை மாகட லொத்து,\nஅருவித் திரள்திகழ் கின்ற வாயிரம் பொன்மலை யொத்து,\nஉருவக் கருங்குழ லாய்ச்சி திறத்தின மால்விடை செற்று,\nதெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 229
எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,\nஉய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,\nவையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,\nதெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 230
ஆவ ரிவைசெய் தறிவார் அஞ்சன மாமலை போலே,\nமேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து,அழ காய\nகாவி மலர்நெடுங் கண்ணார் கைதொழ வீதி வருவான்,\nதேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.
Verse 231
பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ,\nஅங்க வனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட,\nபைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,\nசிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 232
கருமுகில் போல்வதோர் மேனி கையன வாழியும் சங்கும்,\nபெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த,\nஒருமக ளாயர் மடந்தை யொருத்தி நிலமகள், மற்றைத்\nதிருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே.
Verse 233
தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த,\nவானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார்,\nஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும்,\nதானிவை கற்றுவல் லார்மேல் சாரா தீவினை தானே.
Verse 234
ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி\n[TAB]உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்\nதருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த\n[TAB]தாடாளன் தாளணைவீர்,\nதக்க கீர்த்தி அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்\n[TAB]அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,\nதெருவில்மலி விழாவளமும் சிறக்கும் \n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 235
நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை\n[TAB]நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி,\nநக்கன் ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை\n[TAB]ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச்\nசூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்\n[TAB]தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,\nதேன்முகமார் கமலவயல் சேல்பாய்காழிச்\n[TAB]சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 236
வையணைந்த நுதிக்கோட்டு வராக மொன்றாய்\n[TAB]மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,\nநெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள்\n[TAB]நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு\nமையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்\n[TAB]மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,\nசெய்யணைந்து களைகளையா தேறும்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 237
பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து\n[TAB]முன்னாள் பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்\nநெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட\n[TAB]நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத்\nதஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே\n[TAB]தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,\nசெஞ்சுடர வெயில்விரிக்கு மழகார்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 238
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு\n[TAB]திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,\nவெவ்வாய மாகீண்டு வேழ மட்ட\n[TAB]விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்\nஅவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட\n[TAB]அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,\nசெவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 239
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்\n[TAB]படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,\nவெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த\n[TAB]விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்\nதுங்கமுக மாளிகைமே லாயங் கூறும்\n[TAB]துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,\nதிங்கள்முகம் பனிபடைக்கு மழகார்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 240
பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்\n[TAB]புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,\nசெருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள்\n[TAB]வேந்தன் திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த்\nதெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி\n[TAB]வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி\nதெருவில்வலம் புரிதரள மீனும்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 241
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்\n[TAB]பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,\nமட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்\n[TAB]மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ\nநெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ\n[TAB]நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்\nதெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 242
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்\n[TAB]பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,\nகறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்\n[TAB]கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்\nதுறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்\n[TAB]தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,\nசிறைவண்டு களிபாடும் வயல்சூழ்\n[TAB]காழிச்சீராம விண்ணகரே சேர்மி னீரே.
Verse 243
செங்கமலத் தயனனைய மறையோர்\n[TAB]காழிச்சீராம விண்ணகரென் செங்கண் மாலை\nஅங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்\n[TAB]அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்\nகொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்\n[TAB]கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன\nசங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்\n[TAB]தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே.
Verse 244
வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என்\nசிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,\nஅந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்\nசெந்தழல் புரையும் திருவாலி யம்மானே.
Verse 245
நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல்,\nஅரவணை வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,\nசோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து,\nஎங்கும் ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே.
Verse 246
நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது,\nஇம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,\nசெந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய்,\nகரும்பு அந்நற் காடணையும் அணியாலி யம்மானே.
Verse 247
மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்துவந்து,\nநின்மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,\nபுன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,\nஅன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே.
Verse 248
நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும்,\nஎன்மனம் வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,\nபாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து,\nஎங்கும் ஆட லோசையறா அணியாலி யம்மானே.
Verse 249
கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும்,\nபுந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,\nசந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,\nஅந்த ணாள ரறாவணியாலி யம்மானே.
Verse 250
உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம்புகுந்த,\nஅப்புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்,\nநிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,\nமலிஅலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே.
Verse 251
சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய்\nஅருள்புரிந்து இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,\nகொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,\nஇளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே.
Verse 252
ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,\nஒரு பொருள் வேதியர்! அரையா உரையாய் ஒருமாற்றமெந்தாய்!\nநீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து,\nமற்றவர்க் காதியாய் இருந்தாய்! அணியாலி யம்மானே.
Verse 253
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,\nகல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,\nநல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்\nவல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.
Verse 254
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,\nபூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,\nதீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,\nஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.
Verse 255
பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும்,\nஅணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே,\nமணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்,\nபணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே.
Verse 256
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன்\nதாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே,\nசீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும்,\nகூர்வாய சிறுகுருகே குறிப்பறிந்து கூறாயே.
Verse 257
தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு,ஓர்\nமீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ?\nதேன்வாய வரிவண்டே. திருவாலி நகராளும்,\nஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே.
Verse 258
வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப\nநாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த\nதாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த\nதோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே.
Verse 259
தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன்,\nபோரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான்,\nதேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும்,\nகாராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ.
Verse 260
கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல்,\nபண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா!\nவண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா! என்\nகண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ!
Verse 261
குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி!\nதுயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ!\nமுயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே\nவயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே.
Verse 262
நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும்,என்\nமுலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே,\nசிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய\nமலையாளா, நீயாள வளையாள மாட்டோமே.
Verse 263
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி,\nநெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை,\nகையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை,\nஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே.
Verse 264
கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து,\nவள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று,\nவெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று,\nஅள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ.
Verse 265
பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன்\nதொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்\nகெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து,\nவண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ.
Verse 266
அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய் அரக்கர்க்குலப் பாவைதன்னை,\nவெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே\nபஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து,\nவஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.
Verse 267
ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,\nமன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள்! சொலீரறியேன்,\nமாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,\nபோதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ.
Verse 268
தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த,\nமாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள்,\nவேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து,\nபோயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ.
Verse 269
எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள்,\nதன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள்,\nவன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும்,\nஇந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ.
Verse 270
அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள்,\nபின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால்,\nமின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து,\nபுன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ.
Verse 271
முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற,\nசிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை,\nபெற்றிலேன் முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து,\nமற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ.
Verse 272
காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள்,\nபாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து,\nதூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய்,\nவாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.
Verse 273
தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா,\nபோயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று,\nகாய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,\nமேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே.
Verse 274
நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல் எந்தாய்,\nஎமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்\nகந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,\nமந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 275
முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,\nவிதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம் விண்ணணவும்\nபதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,\nமதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 276
கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து,\nகொங்கார் இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போடணைந்திட்ட வம்மானிடம்,\nஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு,\nபொன்னி மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 277
சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய,\nசெருவில் கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,\nமுறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,\nமறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!
Verse 278
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,\nதழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,\nகுழையாட வல்லிக் குலமாட மாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,\nமழையாடு சோலை மயிலாலு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 279
பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது,\nஅவள்தன் உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம்,\nஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,\nமண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 280
தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,\nஇளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,\nமாமதியம் திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,\nமூன்றில் வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 281
துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும்,\nமுற்றா விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம்,\nவேல் நெடுங்கண் முளைவாளெயிற்று மடவார் பயிற்று மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,\nவளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 282
விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,\nபடையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம்,\nபைந் தடத்துப் பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,\nமடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
Verse 283
வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,\nஎன்றும் தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன் கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,\nகண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,\nவிண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.
Verse 284
சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு\n[TAB]தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,\n[TAB]நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்\nநாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி\n[TAB]சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,\nவலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 285
திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்\n[TAB]தேவரொடு தானவர்கள் திசைப்ப,\nஇரணியனை நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்\n[TAB]நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஎண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்\n[TAB]ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,\nமண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 286
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்\n[TAB]அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,\nமுண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்\n[TAB]முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஎண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி\n[TAB]இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய\nவண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 287
கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்\n[TAB]காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,\nதலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த\n[TAB]தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்\n[TAB]செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,\nமலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 288
மின்னனைய ண்மருங்குல் மெல்லியற்கா\n[TAB]யிலங்கை வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர\nதன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த\n[TAB]தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசெந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை\n[TAB]செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,\nமன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 289
பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப்\n[TAB]பெரியபேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு\nதிண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்\n[TAB]தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஉண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்\n[TAB]உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய\nவண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 290
விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து\n[TAB]வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்\nஉளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை\n[TAB]உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,\nஇளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்\n[TAB]ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,\nவளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 291
ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த\n[TAB]அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்,\nகூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்\n[TAB]குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nமாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி\n[TAB]மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப,\nமாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 292
வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு\n[TAB]மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,\nஎங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்\n[TAB]ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசெங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்\n[TAB]சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,\nமங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 293
சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும்\n[TAB]தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில்,\nவங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்\n[TAB]வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,\nமங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய\n[TAB]வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,\nசங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள்\n[TAB]தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.
Verse 294
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்\n[TAB]தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்\nஅருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய\n[TAB]வானோர் அமர்ந்தேத்த இருந்தவிடம்\nபெரும்புகழ்வே தியர்வாழ் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர்\n[TAB]தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,\nஅருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 295
வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும்\n[TAB]விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று\nகுன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும்\n[TAB]குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,\nஎன்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்\n[TAB]ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,\nஅன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 296
உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம்\n[TAB]உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த,\nகும்பமிகு மதயானை மருப்பொசித்துக்\n[TAB] கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,\nமருங் கெங்கும் பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப்\n[TAB]பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,\nஅம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 297
ஓடாத வாளரியி னுருவமது கொண்டு\n[TAB]அன்றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி,\nவாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக்\n[TAB]கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,\nசேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை\n[TAB]செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,\nஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 298
கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்\n[TAB]களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,\nஅண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம்\n[TAB]அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே,\nஅண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும்\n[TAB]அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும்,\nஅண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 299
வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா\n[TAB]இலங்கை மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,\nதாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய்\n[TAB]என்தன் தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார்\nசேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை\n[TAB]செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம்,\nவாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 300
தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்\n[TAB]தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான்,\nகாமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான்\n[TAB]கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி,\nநாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து\n[TAB]வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங்\nகாமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 301
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை\n[TAB]காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான்,\nகுன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்\n[TAB]குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள்,\nதுன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர்\n[TAB]தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை,\nஅன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 302
வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த\n[TAB]தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க\nகஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை\n[TAB]கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,\nமஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து\n[TAB]வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,\nஅஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
Verse 303
சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை\n[TAB]செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில்,\nஅன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர்\n[TAB]அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை,\nகன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான்\n[TAB]கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும்,\nஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத்\n[TAB]துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே.
Verse 304
போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்\nதாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்\nமாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு\nதேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.
Verse 305
யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்\nமூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,\nமாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை\nதேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.
Verse 306
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்\nதானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,\nஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்\nதேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
Verse 307
இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த\nசந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,\nஎந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை\nசுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
Verse 308
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்\nஉண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,\nதெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,\nதிண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
Verse 309
ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத\nபாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,\nசாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்\nசேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
Verse 310
ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை\nவாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,\nஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,\nசேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.
Verse 311
வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,\nகாரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்\nஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,\nசீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
Verse 312
கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ\nகொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,\nவம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,\nசெம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
Verse 313
காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,\nசீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்\nகூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்\nஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே.
Verse 314
கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்\nஅம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்\nசெம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்\nவம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 315
பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,\nஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,\nநல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,\nவல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 316
அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்\nஉண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,\nகொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,\nவண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 317
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,\nஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,\nகரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி\nமருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 318
சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்\nஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,\nஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்\nமாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 319
அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,\nகங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,\nகொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,\nமங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 320
உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை\nஅளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,\nஇளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை\nவளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 321
வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க\nமூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்\nபாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்\nவாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 322
இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்\nஉந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,\nகுந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,\nமந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
Verse 323
மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,\nஅண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,\nபண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்\nஎண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.
Verse 324
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,\nவாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,\nசீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nகாரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
Verse 325
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை,\nஇறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை,\nசிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nமறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே.
Verse 326
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,\nபடர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி\nமறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nகடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
Verse 327
வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,\nஅசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,\nதிசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nஉயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
Verse 328
தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு,\nதாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே,\nதேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nகாமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
Verse 329
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,\nகல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,\nசெல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nஅல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
Verse 330
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,\nகஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை,\nசெஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nஅஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
Verse 331
அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,\nமின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,\nதென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nமன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.
Verse 332
களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,\nஉளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,\nதெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nவளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
Verse 333
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nவானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,\nஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,\nமானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.
Verse 334
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை\nகால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,\nநூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,\nசேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 335
பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,\nபெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,\nநெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,\nசிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 336
படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,\nஅடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,\nமடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,\nதிடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
Verse 337
வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,\nகாரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,\nஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி,\nசீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 338
கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,\nமுலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,\nமலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு\nசிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 339
தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,\nகோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,\nமான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,\nதேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 340
பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்\nமங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,\nகொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,\nசெங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
Verse 341
சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்\nகுலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,\nஇலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,\nசிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 342
ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்\nமோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,\nஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்,\nசேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
Verse 343
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,\nகூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி\nபாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,\nசீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.
Verse 344
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு\nகாம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,\nபூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்\nதேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 345
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இலங்கை\nவவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை,\nகொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த,\nதெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 346
மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள்\nசேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,\nநாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்\nதீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 347
தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி,\nபூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை,\nமாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய\nவாழைத்தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
Verse 348
கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்\nவருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை,\nபெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத,\nதிருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 349
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும்,\nஅண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை,\nஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட,\nதிண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
Verse 350
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,\nநின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,\nமன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்\nதென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 351
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,\nபொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,\nபங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,\nசெங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
Verse 352
பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்\nகோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,\nமூவரி லெங்கள் மூர்த்தி இவன்,என முனிவரோடு,\nதேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
Verse 353
திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை\nமங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,\nபொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்\nவெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே.
Verse 354
தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,\nநாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,\nமாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,\nகாவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே.
Verse 355
மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,\nவிண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்\nதுண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,\nகண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 356
உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,\nகருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,\nபருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்\nகருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 357
முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்\nகனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,\nசுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,\nகனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 358
படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,\nமடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,\nதடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,\nகடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 359
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,\nபல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,\nநல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,\nகல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 360
மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,\nமாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,\nபூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்\nகாத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 361
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,\nகாவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,\nபூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,\nகாவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.
Verse 362
சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,\nஅந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,\nமந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,\nகந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
Verse 363
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,\nபாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,\nகோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.
Verse 364
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,\nநண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,\nதிண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்\nஅண்ணா,அடியே னிடரைக் களையாயே.
Verse 365
கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,\nநந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,\nசெந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்\nஎந்தாய்,அடியே னிடரைக் களையாயே.
Verse 366
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,\nநன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்\nசென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்\nநின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.
Verse 367
கானார் கரிகொம் பதொசித்த களிறே,\nநானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,\nதேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்\nஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.
Verse 368
வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,\nநாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,\nசேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,\nபாடா வருவேன் விணையா யினபாற்றே.
Verse 369
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,\nநல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்\nசெல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,\nஎல்லா இடரும் கெடுமா றருளாயே’
Verse 370
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,\nநாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,\nசேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்\nமாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.
Verse 371
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,\nநாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,\nசீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்\nஆரா வமுதே, அடியேற் கருளாயே’
Verse 372
பூவார் திருமா மகள்புல் லியமார்பா,\nநாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்\nதேவா திருவெள்ளக் குளத்துறை வானே,\nஆவா அடியா னிவன்,என் றருளாயே.
Verse 373
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்\nசெல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,\nகல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,\nவல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.
Verse 374
கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்\nகுவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,\nதவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,\nபவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 375
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,\nவஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,\nசெஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,\nபஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 376
அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு\nசெண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,\nவண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,\nபண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 377
கொல்லை யானாள் பரிசழிந்தாள் கோல்வ ளையார் தம்முகப்பே,\nமல்லை முன்னீர் தட்டிலங்கை கட்ட ழித்த மாயனென்றும்,\nசெல்வம் மல்கு மறையோர்நாங்கை தேவ தேவ னென்றென்றோதி,\nபல்வ ளையா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
Verse 378
அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,\nகுரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும், மாமதியை\nநெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி,\nபரக்க ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
Verse 379
ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்\nவேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து\nசேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,\nபாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 380
நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்\nதேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு\nசேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,\nபாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 381
உலக மேத்து மொருவனென்றும் ஒண்சு டரோடும் பரெய்தா,\nநிலவு மாழிப் படையனென்றும் நேச னென்றும், தென்திசைக்குத்\nதிலத மன்ன மறையோர்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,\nபலரு மேச வென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
Verse 382
கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,\nஎண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,\nதிண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,\nபண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
Verse 383
பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை,\nவார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம்,\nகூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார்,\nஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே
Verse 384
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,\nஇம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,\nஎம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,\nநம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே?
Verse 385
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய\nமைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே\nநந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்\nஎந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே.
Verse 386
பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,\nமூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்\nஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்\nஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே.
Verse 387
ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்\nதேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,\nகாசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்\nவாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே.
Verse 388
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு\nமாய்,எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,\nதாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்\nகேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.
Verse 389
சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,\nஎல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,\nநல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,\nஎல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே.
Verse 390
மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா\nவிட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,\nகாட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,\nநாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே
Verse 391
முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற\nபின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்\nபொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி\nஇன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
Verse 392
எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,\nவந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,\nசிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,\nஇந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே!
Verse 393
ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,\nகாரார் புறவின் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,\nசீராரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,\nஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே.
Verse 394
ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டடொருகால்\n[TAB]ஆலிலைவளர்ந்தவெம்பெருமான்\nபேய்ச்சியழலையுண்டிணைமருதிறுத்துப்\n[TAB]பெருநிலமளந்தவன்கோயில்\nகாய்த்தநீள் கழகுங்கதலியுந்தெங்கும்\n[TAB]எங்குமாம் பொழில்களினடுவே\nவாய்த்தநீர்பாயும்மண்ணியின் தென்பால்\n[TAB]திருவெள்ளியங்குடியதுவே.
Verse 395
ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டு\n[TAB]அரக்கர்தம் சிரங்களை யுருட்டி,\nகார்நிறை மேகம் கலந்தோ ருருவக்\n[TAB]கண்ணனார் கருதிய கோயில்,\nபூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப்\n[TAB]பொதும்பிடை வரிவண்டு மிண்டி,\nதேனிரைத் துண்டங் கின்னிசை முரலும்\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே.
Verse 396
கடுவிடமுடைய காளியன் தடத்தைக்\n[TAB]கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்\nபடமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப்\n[TAB]பல்நடம் பயின்றவன் கோயில்,\nபடவர வல்குல் பாவைநல் லார்கள்\n[TAB]பயிற்றிய நாடகத் தொலிபோய்,\nஅடைபுடை தழுவி யண்டநின் றதிரும்\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே.
Verse 397
கறவைமுன் காத்துக் கஞ்சனைக்காய்த்த\n[TAB]காளமே கத்திரு வுருவன்,\nபறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற\n[TAB]பரமனார் பள்ளிகொள் கோயில்,\nதுறைதுறை தோறும் பொன்மணி சிதறும்\n[TAB]தொகுதிரை மண்ணியின் தென்பால்,\nசெறிமணி மாடக் கொடிகதி ரணவும்\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே.
Verse 398
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து\n[TAB]பாரதம் கையெறிந்து, ஒருகால்\nதேரினை யூர்ந்து தேரினைத் துரந்த\n[TAB]செங்கண்மால் சென்றுறை கோயில்,\nஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி\n[TAB]எமக்கிட மன்றிதென் றெண்ணி,\nசீர்மலி பொய்கை சென்றணை கின்ற\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே.
Verse 399
காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்\n[TAB]கடலரக்கர்தம் சேனை,\nகூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த \n[TAB]கோலவில் இராமன் தன்கோயில்,\nஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்\n[TAB]ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,\nசேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ்\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே
Verse 400
ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த\n[TAB]மாவலி வேள்வியில் புக்கு,\nதெள்ளிய குறளாய் மூவடி கொண்டு\n[TAB]திக்குற வளர்ந்தவன் கோயில்\nஅள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள்\n[TAB]அரியரி யென்றவை யழைப்ப\nவெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே!
Verse 401
முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர்\n[TAB]தம்பெரு மானை,அன் றரியாய்\nமடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட\n[TAB]மாயனார் மன்னிய கோயில்,\nபடியிடை மாடத் தடியிடைத் தூணில்\n[TAB]பதித்தபன் மணிகளி னொளியால்,\nவிடிபக லிரவென் றறிவரி தாய\n[TAB]திருவெள்ளி யங்குடி யதுவே.
Verse 402
குடிகுடி யாகக் கூடிநின் றமரர்\n[TAB]குணங்களே பிதற்றிநின் றேத்த\nஅடியவர்க் கருளி யரவணைத் துயின்ற\n[TAB]ஆழியா நமர்ந்துறை கோயில்,\nகடியுடைக் கமலம் அடியிடை மலரக்\n[TAB]கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,\nவடிவுடை யன்னம் பெடையொடும் சேரும்\n[TAB]வயல்வெள்ளி யங்குடி யதுவே!
Verse 403
பண்டுமுன் ஏன மாகியன் றொருகால்,\n[TAB]பாரிடந் தெயிற்றினில் கொண்டு,\nதெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற\n[TAB]திருவெள்ளி யங்குடி யானை,\nவண்டறை சோலை மங்கையர் தலைவன்\n[TAB]மானவேல் கலியன்வா யொலிகள்,\nகொண்டிவை பாடும் தவமுடையார்கள்\n[TAB]ஆள்வரிக் குரைகட லுலகே.
Verse 404
அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்\nகுறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,\nநறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட,\nபொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே!
Verse 405
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,\nபொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,\nபள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,\nபுள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!
Verse 406
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து,\nமாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்,\nகாவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்,\nபூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!
Verse 407
வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன்,\nவற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்,\nகற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்,\nபொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!
Verse 408
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,\nநெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம்,\nசெய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்,\nபொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே!
Verse 409
மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,\nமன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம்,\nமன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட,\nபுன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே.
Verse 410
குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து,\nசடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்,\nகுடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,\nபுடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே.
Verse 411
கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி,\nஇறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம்,\nமறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்,\nபொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே.
Verse 412
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,\nஅன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,\nமின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,\nபொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே,
Verse 413
கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற\nபொற்றா மரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல்\nகற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி,\nசொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே!
Verse 414
தாம்தம் பெருமை யறியார், தூது\nவேந்தர்க் காய வேந்த ரூர்போல்,\nகாந்தள் விரல்மென் கலைநன் மடவார்,\nகூந்தல் கமழும் கூட லூரே.
Verse 415
செறும்திண் திமிலே றுடைய, பின்னை\nபெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,\nநறுந்தண் தீம்தே னுண்ட வண்டு,\nகுறிஞ்சி பாடும் கூட லூரே!
Verse 416
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்\nஉள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,\nகள்ள நாரை வயலுள், கயல்மீன்\nகொள்ளை கொள்ளும் கூட லூரே!
Verse 417
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்\nஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,\nசேற்றே ருழுவர் கோதைப் போதூண்,\nகோல்தேன் முரலும் கூட லூரே!
Verse 418
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,\nஅண்டத் தமரும் அடிக ளூர்போல்,\nவண்ட லலையுள் கெண்டை மிளிர,\nகொண்ட லதிரும் கூட லூரே.
Verse 419
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,\nதுக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,\nஎக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்\nகொக்கின் பழம்வீழ் கூட லூரே!
Verse 420
கருந்தண் கடலும் மலையு முலகும்,\nஅருந்தும் அடிகள் அமரு மூர்போல்,\nபெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,\nகுருந்தம் தழுவும் கூட லூரே!
Verse 421
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்\nமலைவா ழெந்தை மருவு மூர்போல்,\nஇலைதாழ் தெங்கின் மேல்நின்று,\nஇளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே!
Verse 422
பெருகு காத லடியேன் உள்ளம்,\nஉருகப் புகுந்த வொருவ ரூர்போல்,\nஅருகு கைதை மலர, கெண்டை\nகுருகென் றஞ்சும் கூட லூரே.
Verse 423
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்\nமேவித் திகழும் கூட லூர்மேல்,\nகோவைத் தமிழால் கலியன் சொன்ன,\nபாவைப் பாடப் பாவம் போமே.
Verse 424
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்\nகொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே,\nமன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி,\nதென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே!
Verse 425
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,\nஇசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,\nஉயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,\nதிசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே
Verse 426
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,\nகையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,\nமையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,\nதெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே
Verse 427
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த,\nகாம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு,\nமாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த,\nதீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே
Verse 428
மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,\nஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே,\nகான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற,\nதேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே.
Verse 429
பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,\nஅங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு,\nதங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான்,\nதிங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே
Verse 430
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம்,\nவேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே,\nமாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த,\nதேறல் மாந்திவண் டின்னிசை முரல திருவெள்ளறை நின்றானே
Verse 431
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,\nஅன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,\nமன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,\nதென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே
Verse 432
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும்,\nபாங்கி னாற்கொண்ட பரமநிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே,\nஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித்\nதீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே.
Verse 433
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,\nஅஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,\nநஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,\nஎஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே.
Verse 434
உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்\nஎந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,\nசந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி,\nஅந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே!
Verse 435
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,\nபைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,\nதையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,\nசெய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே!
Verse 436
பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்\nகொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,\nவண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி\nஅண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
Verse 437
விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,\nவளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,\nதுளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்\nதிளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே,
Verse 438
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,\nஅம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,\nஉம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும்,நல்\nசெம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
Verse 439
கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,\nமுலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,\nகுலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்\nஅலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே
Verse 440
கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,\nதுஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,\nமஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்\nசெஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே,
Verse 441
ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,\nதானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,\nவானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்\nதேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே,
Verse 442
சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம்\nமாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,\nவேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,\nஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே,
Verse 443
அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,\nகல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,\nநல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,\nவல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே.
Verse 444
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,\nமருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்\nஉருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட\nதிருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே.
Verse 445
கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான்,\nவிலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய\nமலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்\nசிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே.
Verse 446
மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும்,\nதேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின்,\nகானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற\nஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.
Verse 447
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை \nயே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,\nபேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய்,\nமாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே.
Verse 448
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள்,\nஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்,\nநாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,\nஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே.
Verse 449
தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,\nயாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல்\nமாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற\nதூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே.
Verse 450
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில்\nபேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான்,\nதாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன்,\nஎன்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே.
Verse 451
உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால்,\nமறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால்,\nபிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்\nஅறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.
Verse 452
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,\nவந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,\nசந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,\nஅந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.
Verse 453
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த,\nநீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார்\nகாலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,\nமாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே.
Verse 454
கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,\nமைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,\nஎம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த\nவம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே,
Verse 455
பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்\nஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு\nகாரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,\nஅராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே,
Verse 456
ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,\nதானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்\nதேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்\nஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே,
Verse 457
வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,\nதளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்\nபிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்\nஅளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
Verse 458
நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்\nஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,\nபேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,\nஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே,
Verse 459
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது\nகஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,\nவெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,\nஅஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே,
Verse 460
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது\nவந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்\nகொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த\nஅந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
Verse 461
துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்,\nஅவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த\nஎமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும்,\nஅமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே.
Verse 462
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,\nமெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,\nமைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,\nஅவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே.
Verse 463
ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,\nகாமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்\nநாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,\nநாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே.
Verse 464
பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,\nபிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,\nகொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,\nஅண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 465
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,\nதந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்\nபந்தமும்,பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,\nஅந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 466
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும்,\nதுன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய,\nபின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்\nஅன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,
Verse 467
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி,\nபாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர,\nசேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப,\nஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 468
எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம்,\nபொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய,\nவெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,\nஅங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே,
Verse 469
ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள்,\nஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய,\nஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே,\nஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 470
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன்,\nஎரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,\nவரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால்\nஅரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 471
ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில்\nசூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து\nபாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே\nஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 472
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த\nவாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச்\nசேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,\nஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
Verse 473
பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,\nஅன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை\nமன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள்\nபன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே.
Verse 474
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து\nமாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து\nதோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,\nஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
Verse 475
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து\nகாதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று\nகோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்\nஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
Verse 476
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்,\nமுடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப\nகொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்\nஅடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 477
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா\nநெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து\nவெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்\nஅஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 478
மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன்,\nதோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து\nபோகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்\nஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 479
மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்\nதன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா\nபின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்\nஅன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 480
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,\nகாத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,\nகோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,\nஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 481
வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,\nகாதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப\nஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,\nஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
Verse 482
துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு\nஉளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,\nவளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்\nஅளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
Verse 483
மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,\nஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,\nநீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த,\nபாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.
Verse 484
கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன்,\nபொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும்,\nசெய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர்\nபையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே,
Verse 485
வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும்,\nஅங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,\nதிங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர்,\nஎங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே,
Verse 486
ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால்,\nஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள், என்று விட்டான்,\nபெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல்\nகருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே,
Verse 487
ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன்\nஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான்,\nதேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர்,\nவானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே,
Verse 488
வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர்\nபுக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை,\nநக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த,\nசக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே,
Verse 489
விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால்,\nஇலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான்,\nநலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு\nமலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே,
Verse 490
வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,\nகண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான்,\nதிண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை\nவண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே,
Verse 491
அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள்,\nகொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான்,\nசெம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும்,\nஎம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே,
Verse 492
நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார்,\nமேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம்,\nசேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார்,\nசீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே,
Verse 493
வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி\nகொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை,\nதிண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை,\nகொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே,
Verse 494
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய்,\nமாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை யாய பெருமான்,\nதாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட மார்வர் தகைசேர்,\nநாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 495
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி யாமை முனநாள்,\nமெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மேவு நகர்தான்,\nமையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் கிண்டி யதன்மேல்,\nநைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 496
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி யாமை முனநாள்,\nதம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட மார்வர் தகைசேர்,\nவம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ்,\nநம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 497
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர்\nஇறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல நின்ற பெருமான்,\nசிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல அடிகொள் நெடுமா,\nநறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 498
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர்,\nதோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி யாம ளவெய்தான்,\nவாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான்,\nநாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 499
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை யாக முனநாள்,\nவெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்,\nகொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர்,\nநம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 500
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் நந்தன் மதலை,\nஎந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்ற நகர்தான்,\nமந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் ஆடுபொழில்சூழ்,\nநந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 501
எண்ணில்நினை வெய்தியினி யில்லை யிறை யென்றுமுனி யாளர் திருவார்,\nபண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார்,\nமண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய்\nநண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 502
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர்,\nஅங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி யார றிதியேல்,\nபொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி யெங்கு முளதால்,\nநங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
Verse 503
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும்,\nஉறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை, ஒளிசேர்\nகறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும்,\nமுறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே.
Verse 504
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்\nதொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே\nஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 505
அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே\nவிண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு\nதுண்டவெம் பெருமானே ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 506
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்\nவிழ நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே\nஆண்டாயுன்னைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 507
நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால்,\nகலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே\nஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
Verse 508
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,\nஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்றுஅங் கோரெழுத் தோருரு வானவனே\nஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 509
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி,முத\nலார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே\nஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 510
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,\nபெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே\nஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 511
காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்,\nஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே\nஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 512
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன்,\nஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே,\nஆண்டாய் உனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
Verse 513
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,\nகாமரு சீர்க்கலி கன்றிசொன்ன,\nபாமரு தமிழிவை பாடவல்லார்,\nவாமனன் அடியிணை மருவுவரே.
Verse 514
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்\nஇறுத்தேன், ஐம்புலன் கட்கடனாயின வாயிலொட்டி அறுத்தேன்,\nஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன்,\nநின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 515
மறந்தே னுன்னைமுன்னம் மறந் தமதி யின்மனத்தால்,\nஇறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில்\nபிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா\nசிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.
Verse 516
மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும்,\nஊனேராக்கை தன்னை உதவாமை யுணர்ந்துணர்ந்து,\nவானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே,\nநின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே.
Verse 517
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா\nதறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி\nஎறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து\nசெறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.
Verse 518
பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப,\nஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே\nமாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன்,\nநின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 519
கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன்,\nமல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா,\nமல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த\nவில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 520
வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய்,\nஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி,\nகூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை,\nதேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 521
தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,\nமேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார்,\nமூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த\nதேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 522
போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்\nகோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த\nதூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த\nவேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
Verse 523
தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை,\nவானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார்\nஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார்,\nகோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே.
Verse 524
துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்\nமறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்\nபிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது,நின்\nதிறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே.
Verse 525
துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால்,\nசிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே,\nஅறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே,\nதிறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே.
Verse 526
மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும்,\nஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன்,\nகோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்\nதேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே.
Verse 527
சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்\nதாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன்,\nபோந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள்\nதீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே.
Verse 528
மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப்\nபெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,\nவற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்\nசெற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே
Verse 529
மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,\nசெய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்\nஉய்யும் வகையுணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்\nதெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே.
Verse 530
வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு\nமாறே, நீபணியா தடைநின் திருமனத்து,\nகூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம்\nதேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே.
Verse 531
முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால்,\nவிளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே\nஅளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம்\nதெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே.
Verse 532
சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட\nநல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ,\nமல்லாகுடமாடி. மதுசூத னே உலகில் செல்லா\nநல்லிசையாய் திருவிண் ணகரானே.
Verse 533
தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில்,\nசீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை\nகாரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை,\nஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே.
Verse 534
கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால்,\nபண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன்,\nவிண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான்,\nநண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 535
கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர்\nஇங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன்,\nதிங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை\nநங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 536
கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை\nஎங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன்\nசெங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர்,\nநங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 537
கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை,\nவம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன்,\nசெம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்\nநம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 538
விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண்\nசலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன்,\nமலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு,\nநலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 539
மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,\nஎன்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,\nதொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,\nநன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 540
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன்\nபொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன்,\nசொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர்,\nநல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 541
வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,\nகேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,\nவேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,\nநாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 542
கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,\nகுனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,\nபனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,\nநனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
Verse 543
பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன்,\nநறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற,\nகறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல்,\nமறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே.
Verse 544
கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர்\nதுலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய,\nவலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்,\nநலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
Verse 545
முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,\nபுனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்\nசினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில்கூவும்,\nநனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே.
Verse 546
ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,\nசேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,\nமீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,\nநானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே.
Verse 547
உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு,\nவெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர்,\nபொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட,\nநறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே.
Verse 548
விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய்,\nநடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்,\nபெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று\nநடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே.
Verse 549
பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,\nபுகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,\nநெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்\nநகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே.
Verse 550
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த,\nஅந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர்,\nபொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி,\nநந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே.
Verse 551
வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்\nவிள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,\nகொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,\nநள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே.
Verse 552
பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன்\nதேரை யூரும் தேவ தேவன் சேருமூர்,\nதாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ,\nநாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே.
Verse 553
தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற\nநாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,\nகாமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை,\nசேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே.
Verse 554
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,\nகொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,\nவம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,\nசெம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 555
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,\nஎழுந்தினிது விளையாடு மீச னெந்தை இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்\nஉழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,\nசெழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 556
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா\nசெவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்\nகவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற\nதெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 557
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி\nஅங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்\nவெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த\nசெங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 558
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் அரியுருவா யிரணியன தாகங்கீண்டு\nவென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து\nபொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும்பொன்னிநாடன்,\nதென் தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 559
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,\nதன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் தானாய னாயினான் சரணென்றுய்வீர்\nமின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட\nதென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 560
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே\nஇலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்\nமலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்\nசிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 561
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்\nசெருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்\nஇருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட\nதிருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 562
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற\nபேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,\nபாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த\nதேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
Verse 563
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை\nபொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த\nஅம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார்பாடி\nவெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே.
Verse 564
ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை\nதோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்\nவேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி\nநாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே.
Verse 565
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய\nதனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில்\nபனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட\nநனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
Verse 566
தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து\nதுள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண்\nபுள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட\nநள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
Verse 567
ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்\nவிளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் மென்மலர்மேல்\nகளியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற\nநளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே.
Verse 568
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து\nகல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்\nசொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்\nநல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே.
Verse 569
வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான்\nவெள்கி யோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்\nபள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி\nநள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே.
Verse 570
மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி,\nகுடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்\nபடையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ்\nநடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே.
Verse 571
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து\nகந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்\nசெந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர்\nநந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே
Verse 572
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து,\nஉடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப\nமாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் நாறும்\nபொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே.
Verse 573
நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை\nகன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை\nபன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள்\nமன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே.
Verse 574
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்\nதான்கொண்டு தாளால் அளந்த பெருமானை\nதேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை\nநான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
Verse 575
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்\nஅந்நீரை மீனா யமைத்த பெருமானை\nதென்னாலி மேய திருமாலை யெம்மானை\nநன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே.
Verse 576
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்\nமூவாமை நல்கி முதலை துணித்தானை\nதேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை\nநாவாயு ளானை நறையூரில் கண்டேனே.
Verse 577
ஓடா அரியாய் இரணியனை யூனிடந்த\nசேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை\nவாடா மலர்த்துழாய் மாலை முடியானை\nநாடோறும் நாடி நறையூரில் கண்டேனே.
Verse 578
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்\nவல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த\nவில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக\nநல்லனை நாடி நறையூரில் கண்டேனே.
Verse 579
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்\nவம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை\nஅம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை\nநம்பனை நாடி நறையூரில் கண்டேனே.
Verse 580
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி\nவிட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை\nமட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை\nநட்டானை நாடி நறையூரில் கண்டேனே.
Verse 581
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்\nபண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து\nவிண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை\nநண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே.
Verse 582
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்\nசங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை\nகொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை\nநங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.
Verse 583
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை\nநன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்\nகன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்\nபொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே.
Verse 584
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம் \nமடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர் \nமுடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்\nஇடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே.
Verse 585
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி\nவழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்\nபழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற\nஅழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே.
Verse 586
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்\nதிளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்\nவளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு\nஅளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே.
Verse 587
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்\nநின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்\nமன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த\nகுன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே.
Verse 588
அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்\nமிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்\nபகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்\nபுகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே.
Verse 589
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்\nமின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்\nமின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்\nமன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே.
Verse 590
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்\nபார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்\nகார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்\nதார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே.
Verse 591
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்\nதலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்\nமலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி\nநிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே.
Verse 592
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்\nநிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்\nபிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த\nஇறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே.
Verse 593
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை\nவண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்\nபண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்\nவிண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே
Verse 594
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை\nஇடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய\nகடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால்\nநடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
Verse 595
விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள்,முன்\nதடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்\nஇடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால்\nநடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
Verse 596
பூணா தனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பைப்\nபேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திருமார்வன்\nபாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர்வெண்ணெய்\nநாணா துண்டான் நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
Verse 597
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்,\nஎல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான், இலங்கைக்கோன்\nவல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை, விபீடணற்கு\nநல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
Verse 598
குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத\nவிடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை\nஅடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்\nநடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே!
Verse 599
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர்\nமான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும்\nதேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்\nநானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே!
Verse 600
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையு மிருநிலனும்\nஒன்று மொழியா வண்ண மெண்ணி நின்ற அம்மானார்\nகுன்று குடையா வெடுத்த அடிக ளுடைய திருநாமம்\nநன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோநா ராயணமே!
Verse 601
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று\nபடுங்கால் நீயே சரணென்றாயர் அஞ்ச அஞ்சாமுன்\nநெடுங்கால் குன்றம் குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால்\nநடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே.
Verse 602
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை நிலமா மகள்மலர்மா\nமங்கை பிரமன் சிவனிந் திரன்வா னவர்நா யகராய்\nஎங்க ளடிக ளிமையோர் தலைவ ருடைய திருநாமம்\nநங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோநா ராயணமே.
Verse 603
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை\nநாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை\nகாவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை\nமேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே.
Verse 604
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,\nமறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,\nநறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,\nபிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே!
Verse 605
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,\nதுற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,\nஅற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,\nபெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே.
Verse 606
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,\nஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,\nகாரேய் கடலே மலையே திருக்கோட்டி\nயூரே, உகந்தா யையுகந் தடியேனே
Verse 607
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,\nஉள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,\nகள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,\nவள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே.
Verse 608
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,\nகல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,\nநல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,\nசொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே.
Verse 609
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,\nமுனியே திருமூழிக் களத்து விளக்கே,\nஇனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய\nகனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே!
Verse 610
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,\nநிதியே திருநீர் மலைநித் திலத்தொத்தே,\nபதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்\nகதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே.
Verse 611
அத்தா அரியே என்றுன் னையழைக்க,\nபித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,\nமுத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற\nவித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.
Verse 612
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,\nதாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,\nஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட\nவாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே!
Verse 613
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,\nஎன்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,\nதொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,\nஉண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே.
Verse 614
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட\nகள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,\nஉள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,\nநள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 615
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்\nமாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,\nபாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,\nநாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 616
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,\nஅம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,\nநன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்\nமைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே
Verse 617
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்\nஉறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்\nஅறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்\nநறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 618
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,\nஆண்டாயென் று ஆதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,\nபூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்,\nநாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 619
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை\nவந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,\nஅந்தோ என் னாருயிரே அரசே அருளெனக்கு நந்தாமல்\nதந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 620
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,\nஎன்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,\nவன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,\nநன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 621
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,\nகைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,\nஇப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்\nநற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ!
Verse 622
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,\nயானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த\nதேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,\nநானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ.
Verse 623
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை\nகன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,\nசொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்\nநன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.
Verse 624
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்\n[TAB] செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு,\nஎன்று மெப்போதும் நின்றேத்தும் மாமுனியை\n[TAB] மர மேழெய்த மைந்தனை,\nநனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை\n[TAB] நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,\nகனவில் கண்டே னின்றுகண் டமையாலென்\n[TAB] கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே.
Verse 625
தாய்நி னைந்தகன் றேயொக்க\n[TAB] என்னையும் தன்னை யேநினைக் கச்செய்து,\nதானெனக் காய்நி னைந்தருள் செய்யு மப்பனை\n[TAB] அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட வாயனை,\nமகரக்குழைக் காதனை\n[TAB] மைந்த னைமதிள் கோவ லிடைகழி\nயாயனை,அம ரர்க்கரி யேற்றை\n[TAB] என் அன்ப னையன்றி யாதரி யேனே.
Verse 626
வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான்\n[TAB] மற்றோர் நெஞ்சறி யான்,\nஅடி யேனுடைச் சிந்தை யாய்வந்து\n[TAB] தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,\nகொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்\n[TAB] குட மாடிய கூத்தனை,\nஎந்தை யையெந்தை தந்தைதம் மானை\n[TAB] எம்பிரானையெத் தால்மறக் கேனே?
Verse 627
உரங்க ளாலியன் றமன்னர் மாளப்\n[TAB] பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,\nஇரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் எம்பி ரானை\n[TAB] வம்பார் புனல் காவிரி,\nஅரங்க மாளியென் னாளிவிண் ணாளி\n[TAB] ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,\nசரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி\n[TAB] என்மனம் தாழ்ந்துநில் லாதே!
Verse 628
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போது\n[TAB] அஞ்சே லென்றடி யேனையங் கேவந்து தாங்கு,\nதாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை\n[TAB] உம் பர்க்கணி யாய்நின்ற,\nவேங்கடத்தரி யைப்பரி கீறியை\n[TAB] வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட தீங்க ரும்பினை, \nதேனைநன் பாலினை அன்றி\n[TAB] என்மனம் சிந்தைசெய் யாதே.
Verse 629
எட்ட னைப்பொழு தாகிலு\n[TAB] என்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,\nதட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின்\n[TAB] தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங் கட்டி யை,\nகரும் பீன்றவின் சாற்றைக்\n[TAB] காத லால்மறை நான்குமுன் னோதிய பட்ட னை,\nபர வைத்துயி லேற்றையென்\n[TAB] பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே!
Verse 630
பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற\n[TAB] பாலை யாகி யிங்கே புகுந்து, என்\nகண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான்\n[TAB] கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,\nவிண்ணு ளார்பெரு மானையெம் மானை\n[TAB] வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல் வண்ணன்\nமாமணி வண்ணனெம் மண்ணல்\n[TAB] வண்ண மேயன்றி வாயுரை யாதே!
Verse 631
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர்\n[TAB] எமக் கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்\nதுனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்\n[TAB] தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்\nமுனியை வானவ ரால்வணங் கப்படும்\n[TAB] முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்\nகனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட\n[TAB] கள்வ னையின்று கண்டுகொண் டேனே.
Verse 632
என்செய் கேனடி னேனுரை யீர்இதற்\n[TAB] கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,\nதஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்\n[TAB] நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை\nமிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்\n[TAB] சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,\nபொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை\n[TAB] அன்றி யென்மனம் போற்றியென் னாதே.
Verse 633
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்\n[TAB] தோன்றல் வாள்கலி யன்திரு வாலி\nநாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன்\n[TAB] நல்ல மாமலர் சேவடி, சென்னியில்\nசூடி யும்தொழு துமெழுந் தாடியும்\n[TAB] தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,\nபாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்\n[TAB] பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.
Verse 634
கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை,\nமண்சேர முலையுண்ட மாமதலாய் வானவர்தம் கோவே. என்று,\nவிண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை\nயெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமேலாரே.
Verse 635
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல்\nகொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்,\nவம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய,\nஎம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே.
Verse 636
மீதோடி வாளெயிறு மின்னிலக முன்விலகு முருவி னாளை\nகாதோடு கொடிமூக்கன் றுடனறுத்த கைத்தலத்தா என்று நின்று,\nதாதோடு வண்டலம்பும் தண்சேறை எம்பெருமான் தாளை யேத்தி,\nபோதோடு புனல்தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின் றாரே.
Verse 637
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ,\nபோராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும்\nதாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும்,\nபேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே.
Verse 638
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன்,\nமுந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால்,\nசந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும்\nசிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே.
Verse 639
பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா என்று நின்று,\nதொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன்,\nவண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை,\nகண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே.
Verse 640
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா. என்றும்,\nமைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம்\nசெய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு,என்\nஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே!
Verse 641
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா, மேலை\nவிண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்போ லடியி னானை,\nபண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் றன்னை,\nகண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே!
Verse 642
கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் போதொருகால் கவலை யென்னும்,\nவெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால்\nதள்ளத்தேன் மணநாறும் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும்\nஉள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் என்னுள்ள முருகு மாறே!\n
Verse 643
பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு, அன்னம்\nதேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் தண்சேறை யம்மான் றன்னை,\nவாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்,\nதூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் துணைக்கையால் தொழுது நின்றே.
Verse 644
தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த\nஎந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,\nமுந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்\nஅந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.
Verse 645
பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை யாள,\nபாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும்,\nநீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள்,\nஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!
Verse 646
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,\nஉம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும்,\nகொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்,\nஅம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே.
Verse 647
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்\nஉள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,\nபுள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,\nஅள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே.
Verse 648
பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்,\nநிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,\nதுகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,\nஅகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.
Verse 649
ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,\nமாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,\nநீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,\nஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
Verse 650
மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்\nநீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும்\nவேலைக் கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,\nஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே.
Verse 651
வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்\nநெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,\nபஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்\nஅஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
Verse 652
என்னைம் புலனு மெழிலுங்கொண் டிங்கே நெருந லெழுந்தருளி\nபொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன புனித ரூர்போலும்,\nமன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட\nஅன்னம் பெடையோ டுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!
Verse 653
நெல்லில் குவளை கண்காட்ட ரில் குமுதம் வாய்காட்ட,\nஅல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி யழுந்தூர் நின்றானை,\nவல்லிப் பொதும்பில் குயில்கூவும் மங்கை வேந்தன் பரகாலன்,\nசொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே.
Verse 654
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,\nசங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,\nசெங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,\nஅங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.
Verse 655
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,\nமூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,\nஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,\nதேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே
Verse 656
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,\nவிடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,\nஅடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்\nஉடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
Verse 657
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று\nபொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,\nஅன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்\nநின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.
Verse 658
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,\nவஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,\nசெஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற\nஅஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே.
Verse 659
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,\nஉரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்\nகரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்\nகரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே!
Verse 660
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,\nஉருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,\nஅருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற\nகருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே!
Verse 661
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்\nமுலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,\nஅலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற\nகலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
Verse 662
பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்\nவாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,\nஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,\nகாரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.
Verse 663
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற\nஅறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்\nகறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,\nமுறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.
Verse 664
திருவுக் கும்திரு வாகிய செல்வா\n[TAB] தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,\nஉருவச் செஞ்சுட ராழிவல் லானே\n[TAB] உலகுண் டவொரு வா.திரு மார்பா,\nஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்\n[TAB] உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா\nதருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்\n[TAB] அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 665
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி\n[TAB] பாவை பூமகள் தன்னொடு முடனே\nவந்தாய்,என்மனத் தேமன்னி நின்றாய்\n[TAB] மால்வண்ணா மழை போலொளி வண்ணா,\nசந்தோகா பௌழியா தைத்திரியா\n[TAB] சாம வேதியனே நெடு மாலே,\nஅந்தோ நின்னடி யன்றிமற் றறியேன்\n[TAB] அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 666
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்\n[TAB] நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்\nசெய்யா தவுல கத்திடைச் செய்தாய்\n[TAB] சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,\nபொய்யா லைவரென் மெய்குடி யேறிப் \n[TAB] போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்\nஐயா நின்னடி யன்றிமற் றறியேன் \n[TAB] அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 667
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன்\n[TAB]பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்\nவரனே,மாதவ னே மது சூதா\n[TAB]மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்\nநரனே நாரண னே திரு நறையூர் நம்பீ\n[TAB]எம்பெரு மான் உம்ப ராளும்\nஅரனே ஆதிவ ராகமுன் னானாய்\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 668
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்\n[TAB]பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,\nபண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்\n[TAB]பண்பாளா பரனே பவித்திரனே,\nகண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை\n[TAB]கரும மாவது மென்றனக் கறிந்தேன்,\nஅண்டா. நின்னடி யன்றிமற் றறியேன்\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 669
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்\n[TAB]சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற\nதாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்\n[TAB]தாடாளா தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்\nசேயாய், கிரேத திரேத துவாபர\n[TAB]கலியு கமிவை நான்குமு னானாய்,\nஆயா நின்னடி யன்றிமற் றறியேன்\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 670
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்\n[TAB]கார்வண் ணா கடல் போல் ஒளி வண்ணா\nஇறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்\n[TAB]எந்தாய் அந்தர மேழுமு னானாய்,\nபொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப்\n[TAB]போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்\nஅறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 671
நெடியா னே கடி ஆர்கலி நம்பீ\n[TAB] நின்னை யேநினைந் திங்கிருப் பேனை\nகடியார் காளைய ரைவர் புகுந்து\n[TAB] காவல் செய்தவக் காவலைப் பிழைத்து\nகுடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்\n[TAB] கூறை சோறிவை தந்தெனக் கருளி\nஅடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்\n[TAB] அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 672
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்\n[TAB]கூறை சோறிவை தா என்று குமைத்துப்\nபோகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்\n[TAB]புனிதா புட்கொடியாய் நெடு மாலே,\nதீவாய் நாகணை யில்துயில் வானே\n[TAB]திருமாலே இனிச் செய்வதொன் றறியேன்,\nஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
Verse 673
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த\n[TAB]அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,\nகன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி\n[TAB]ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,\nசொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை\n[TAB]தூய மாலை யிவைபத்தும் வல்லார்,\nமன்னி மன்னவ ராயுல காண்டு\n[TAB]மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே.
Verse 674
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்\n[TAB] திருவடியி னிணைவருட முனிவரேத்த\nவங்கமலி தடங்கடலுள் அனந்தனென்னும்\n[TAB] வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்\nஎங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து\n[TAB] வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை\nஅங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 675
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண\n[TAB] முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து\nபன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்\n[TAB] பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்\nசெந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்\n[TAB] அவைமுரலச் செங்கமல மலரை யேறி\nஅன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
Verse 676
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்\n[TAB] கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று\nநிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன\n[TAB] நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்\nமலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு\n[TAB] வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய\nஅலைத்துவரும் பொன்னிவளம் பெருகும்\n[TAB] செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 677
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்\n[TAB] திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி\nஇலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி\n[TAB] எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்\nபுலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க\n[TAB] பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால\nஅலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
Verse 678
சினமேவும் அடலரியி னுருவ மாகித்\n[TAB] திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு\nமனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி\n[TAB] மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின்\nஇனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை\n[TAB] ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல்\nஅனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 679
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி\n[TAB] மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி\nதானமர வேழுலகு மளந்த வென்றித்\n[TAB] தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்\nதேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்\n[TAB] செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்\nஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 680
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்\n[TAB] பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்\nஅந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ\n[TAB] அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்\nசெந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்\n[TAB] திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க\nஅந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 681
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு\n[TAB] பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து\nவம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த\n[TAB] தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்\nசெம்பவள மரகதநன் முத்தம் காட்டத்\n[TAB] திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்\nஅம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 682
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்\n[TAB] ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற\nநீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி\n[TAB] நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காணமின்\nசேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்\n[TAB] திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்\nஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்\n[TAB] தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
Verse 683
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்\n[TAB] படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை\nஅன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்\n[TAB] அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை\nகன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்\n[TAB] கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,\nஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்\n[TAB] ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே.
Verse 684
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்\nவெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்\nதெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்\nதுள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.
Verse 685
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி,\nபிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,\nதிருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஉருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே.
Verse 686
பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.\nஅறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்\nசிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும்,\nஇறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே.
Verse 687
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,\nதானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்\nதேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்\nதானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே.
Verse 688
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்\nஎந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம்,\nஎறிநீர்ச் செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து\nஅந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே.
Verse 689
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,\nகழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,\nசெழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,\nதொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே.
Verse 690
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்\nமாயா எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,\nதீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்\nதாயோ உன தடியார்மனத் தாயோவறி யேனே.
Verse 691
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,\nஉய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்\nசெவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே.
Verse 692
கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,\nபெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,\nதிருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஅருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.
Verse 693
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,\nகாரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,\nபாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.
Verse 694
பெரும்பு றக்கட லையட லேற்றினைப்\nபெண்ணை யாணை,எண்ணில் முனிவர்க்கருள்\nதருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்\nபத்த ராவியை நித்திலத் தொத்தினை,\nஅரும்பி னையல ரையடி யேன்மனத்\nதாசை யை அமு தம்பொதி யின்சுவைக்\nகரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 695
மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்\nமெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,\nமைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை\nமாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,\nநென்ன லைப்பக லையிற்றை நாளினை\nநாளை யாய்வரும் திங்களை யாண்டினை,\nகன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 696
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை\nவாச வார்குழ லாள்மலை மங்கைதன்\nபங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப்\nபான்மை யைப்பனி மாமதி யம்தவழ்\nமங்கு லைச்,சுட ரைவட மாமலை\nஉச்சியை,நச்சி நாம்வணங் கப்படும்\nகங்குலை,பகலைச் சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 697
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத்\nதெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,\nமாய னைமதிள் கோவலி டைகழி\nமைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை,\nஇலங் கும்சுடர்ச் சோதியை எந்தை\nயையெனக் கெய்ப்பினில் வைப்பினை\nகாசி னைமணி யைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 698
ஏற்றி னையிம யத்துளெம் மீசனை\nஇம்மை யைமறு மைக்கு மருந்தினை,\nஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும்\nஐய னைக்கையி லாழியொன் றேந்திய\nகூற்றி னை,குரு மாமணிக் குன்றினை\nநின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,\nகாற்றி னைப்புன லைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 699
துப்ப னைத்துரங் கம்படச் சீறிய\nதோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்\nசெப்பி னை,திரு மங்கைம ணாளனைத்\nதேவ னைத்திக ழும்பவ ளத்தொளி\nஒப்னை,உல கேழினை யூழியை\nஆழி யேந்திய கையனை அந்தணர்\nகற்பினை,கழு நீர்மல ரும்வயல்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 700
திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்\nதேவ தேவனை மூவரில் முன்னிய\nவிருத்தனை,விளங் கும்சுடர்ச் சோதியை\nவிண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய\nஅருத்த னை,அரி யைப்பரி கீறிய\nஅப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற\nகருத்த னை,களி வண்டறை யும்பொழில்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 701
வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்\nகன்று வீசிய ஈசனை, பேய்மகள்\nதுஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்\nதோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய\nநஞ்சி னை,அமு தத்தினை நாதனை\nநச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,\nகஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 702
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்\nபாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற\nவிண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை\nவேள்வி யைவிளக் கினொளி தன்னை,\nமண்ணி னைமலை யையலை நீரினை\nமாலை மாமதி யைமறை யோர்தங்கள்\nகண்ணி னை,கண்க ளாரள வும்நின்று\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
Verse 703
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்என்று\nகாத லால்கலி கன்றியு ரைசெய்த,\nவண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை\nவல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்\nவிண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்\nமெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய\nகண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்\nகற்க லாம்கவி யின்பொருள் தானே.
Verse 704
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண்டொண்சங்கம் என்கின் றாளால்\nமலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக்கெற்றேகாண் என்கின் றாளால்\nமுலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின்றாளால்,\nகலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 705
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின்றாளால்\nபொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின்றாளால்\nஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின்றாளால்\nகருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 706
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்\nமின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின்றாளால்\nபொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்\nகன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 707
தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின்றாளால்,\nபோரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,\nஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின்றாளால்\nகார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 708
அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின்றாளால்\nமுடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின்றாளால்\nவடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்\nகடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 709
பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்\nஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால்\nநீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்\nகாரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 710
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,\nஅவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,\nமைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,\nகைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 711
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின்றாளால்\nவெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்\nபெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்\nகற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 712
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின்றாளால்\nஉண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்\nபண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்\nகண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
Verse 713
மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று\nகாவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன\nபாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார்\nபூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே.
Verse 714
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்\nவெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ\nதுள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,\nகைவளை கொள்வது தக்கதே?
Verse 715
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,\nகாணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,\nபாணனார் திண்ண மிருக்க இனியிவள்\nநாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே.
Verse 716
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்\nவெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,\nபெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்\nஉருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ.
Verse 717
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,\nபெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,\nகண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்\nவண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.
Verse 718
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,\nபெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,\nவெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,\nவண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே.
Verse 719
வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,\nஇடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,\nமடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்\nகடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே.
Verse 720
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,\nஇரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்\nதுரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்\nஅரங்கமே என்ப திவள்தனக் காசையே.
Verse 721
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா\nகண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்\nவண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்\nகொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?
Verse 722
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,\nதெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,\nகள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்\nபிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே?
Verse 723
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,\nபார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,\nசீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,\nநீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.
Verse 724
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,\nதிரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,\nவிரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர\nவரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.
Verse 725
அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும்\nதெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,\nவரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,\nகரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.
Verse 726
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்\nதிங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்\nபைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த\nசெங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.
Verse 727
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,\nதிணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,\nமணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்\nபுணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.
Verse 728
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்\nதீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்\nதாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,\nவாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.
Verse 729
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,\nதிடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,\nஅடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,\nஉடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
Verse 730
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,\nதெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,\nஎண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,\nஉண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
Verse 731
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்\nசெங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,\nவங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,\nசெங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.
Verse 732
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,\nசீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,\nபேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்\nபேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.
Verse 733
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்\nவாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,\nகாமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,\nநாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.
Verse 734
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,\nமண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,\nகண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,\nவண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ.
Verse 735
வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,\nபாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,\nகாதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
Verse 736
விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,\nஅண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,\nகண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்\nவண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ.
Verse 737
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,\nசீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,\nகார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,\nதார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
Verse 738
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,\nபாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,\nகாராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
Verse 739
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,\nபாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,\nகாரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,\nதாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
Verse 740
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்\nதார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,\nகாமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
Verse 741
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,\nசால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்\nகாலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,\nகோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.
Verse 742
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,\nஅந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,\nகந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,\nகொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.
Verse 743
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,\nகண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,\nகொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,\nதொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ.
Verse 744
தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின்,தமியேன்றன்\nசிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை\nஅந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும்\nமந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே.
Verse 745
மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில்\nதாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்\nஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்\nதேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே.
Verse 746
ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா\nபேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ\nதூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால்\nஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே.
Verse 747
கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்\nமயஙகவெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்\nதயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்\nஇயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை எனக்கெனப் பெறலாமே.
Verse 748
ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த\nஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்\nதோழி நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில்\nஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே.
Verse 749
முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்\nவரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்\nஎரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா\nகரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே.
Verse 750
கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம்\nமலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால்\nஇலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும்,ஆயன்\nவிலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே.
Verse 751
முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி\nமழுவி னால்மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்\nஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையையடங்கவஞ் சிறைகோலி\nதழுவு நள்ளிருள் தனிமையிற் கடியதோர் கொடுவினை யறியேனே.
Verse 752
கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த\nமனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை\nசினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்\nஅனந்த லன்றிலின் அரிகுரல் பாவியேனாவியை யடுகின்றதே.
Verse 753
வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து\nஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,\nகார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார்\nஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே.
Verse 754
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்\nதிண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்\nவண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம்\nகண்டாள் கண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 755
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து\nபெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை\nஇருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப\nகருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 756
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,\nஅல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்\nவல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை\nகல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 757
மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ்சிலைகால் வளைவித்து,\nகொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று\nதொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ\nகல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 758
ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்\nஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி\nசேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்\nகாமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 759
வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்\nதிருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,\nபெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்\nகருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 760
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு\nகொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்\nஅலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்\nகலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 761
மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க\nகாலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,\nமாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,\nகாலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 762
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,\nவன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,\nசென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து\nகன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
Verse 763
கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை\nதிருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்\nமருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்\nஇருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
Verse 764
வியமுடை விடையினம் உடைதர மடமகள்,\nகுயமிடை தடவரை யகலம துடையவர்,\nநயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,\nகயமிடை கணபுரம் அடிகள்தமிடமே.
Verse 765
இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து\nதுணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,\nமணமலி விழவினொ டடியவர் அளவிய,\nகணமலி கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 766
புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,\nமயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,\nமுயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,\nகயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 767
ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்\nபோதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்\nகோதிய மதுகரம் குலவிய மலர்மகள்\nகாதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 768
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ\nஅண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து\nவிண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ\nகண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 769
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,\nதழுவிய உருவினர் திருமகள் மருவிய\nகொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்\nஎழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 770
பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்\nஎரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்\nசுருதியொ டருமறை முறைசொலு மடியவர்\nகருதிய கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 771
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு\nகொடிபுல்கு தடவரை அகலம துடையவர்\nமுடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்\nகடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 772
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய\nநிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்\nவலமனு படையுடை மணிவணர் நிதிகுவை\nகலமனு கணபுரம் அடிகள்தம் இடமே.
Verse 773
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை\nவலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்\nகலியன தமிழிவை விழுமிய இசையினொடு\nஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.
Verse 774
வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்\nமீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்\nஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்\nகானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 775
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு\nஇலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்\nவிலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,\nகலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 776
பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்\nஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,\nகூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,\nகாரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 777
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து\nவிளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து\nபிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து\nகளஞ்செய் புறவில் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 778
தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்\nமுழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை\nஉழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்\nகழுநீர் மலரும் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 779
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால்\nபடியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை\nகுடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்\nகடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 780
வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி\nவெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து,\nசெய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும்\nகைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 781
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி\nவெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்து\nசெற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப\nகற்ற மறையோர் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 782
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்\nஇவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை\nஉவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல்\nகவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
Verse 783
மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த் தானாய்\nபின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும் ஆனான் றன்னை\nகண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த\nதேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே.
Verse 784
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை\nமைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,\nஎம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்\nஅம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
Verse 785
தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,\nவருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில்,\nதிருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த\nபெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே.
Verse 786
விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற\nபடையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,\nமடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்\nறுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ?
Verse 787
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்\nபுக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை\nதக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த\nஅக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
Verse 788
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,\nஎந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ\nகொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த\nமைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே.
Verse 789
எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,\nஅஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,\nநெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய்,\nமஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே.
Verse 790
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,\nஉற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,\nமுற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை\nஎத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே.
Verse 791
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே\nபற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை\nவற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்\nபெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே.
Verse 792
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்\nதண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்\nவிண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை\nகண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.
Verse 793
செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்\nகருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை\nஇருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,\nவருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே.
Verse 794
வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்\nஉண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே\nதொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்\nகண்டானே கண்ண புறத்துறை யம்மானே.
Verse 795
பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்\nஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்\nவருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்\nகருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 796
மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ\nடுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை\nமற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்\nகற்று நான் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 797
பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்\nஉண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்\nமண்ணாளா வாள்நெடுங் கண்ணி மதுமலராள்\nகண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே.
Verse 798
பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்\nமற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்\nஉற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்\nகற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 799
ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,\nபார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது\nசோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ\nகாத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 800
வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்\nதுள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே\nவள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்\nகள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 801
மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன்\nபூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்\nபேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்\nகாணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 802
நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக\nமாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை\nபாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை\nகாட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே.
Verse 803
கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை\nகொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை\nபண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்\nஅண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே.
Verse 804
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி\nசங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்\nஅங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்\nசெங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 805
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கியுள் நினைந்து\nதுவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன்\nகுவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி\nதிவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 806
வாதைவந் தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப\nமீதுகொண் டுகளும் மீனுரு வாகி விரிபுனல் வரியகட் டொளித்தோன்\nபோதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து\nசீதவொண் தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 807
வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்\nபன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்\nஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்து உயர்கொடி யொளிவளர் மதியம்,\nசென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 808
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு\nபின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்\nஅன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல்\nசெந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 809
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக்\nகுழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன், குலைமலி கதலிக்\nகுழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும்\nசெழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 810
வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை\nபானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்\nகானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர\nதேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 811
அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை அஞ்சிடா தேயிட, அதற்குப்\nபெரியமா மேனி யண்டமூ டுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்\nவரையின்மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்\nதிரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங் குடியுள் நின் றானே.
Verse 812
பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில்\nமன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன்\nதுன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்\nதென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
Verse 813
கலையுலாவல்குல் காரிகை திறத்துக் கடல்பெரும் படையொடும் சென்று\nசிலையினால் இலங்கை தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை\nமலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்\nஉலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே.
Verse 814
பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின்\nஇவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ,\nஎன்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்\nஅன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா.
Verse 815
தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த\nசேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி\nபாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி\nஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா.
Verse 816
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்\nதாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு,\nசேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி\nஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா.
Verse 817
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி,\nநம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர்\nசெம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில்\nஅம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா.
Verse 818
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன\nபாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்\nவாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,\nஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா.
Verse 819
வெஞ்சின வேழம் மருப்பொ சித்த வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை\nதஞ்சுடை யாளர்கொல் யான றியேன் தாமரைக் கண்க ளிருந்தவாறு\nகஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த காளையா ரவர்கண் டார்வணங்கும்\nஅஞ்சன மாமலை யேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா.
Verse 820
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும் பேரரு ளாளர்கொல்? யானறியேன்,\nபணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ பண்டிவர் தம்மையும் கண்டறியோம்\nஅணிகெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கய மேனிவானத்து,\nஅணிகெழு மாமுகி லேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா.
Verse 821
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்\nநெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?\nமஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்\nஅஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொரு வரழகியவா.
Verse 822
எண்டிசை யுமெறி நீர்க்க டலும் ஏழுல குமுட னேவிழுங்கி\nமண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்\nகொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்\nஅண்டத் தமரர் பணிய நின்றார் அச்சோவொருவரழகியவா.
Verse 823
அன்னமும் கேழலும் மீனு மாய ஆதியை நாகை யழகியாரை\nகன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க்கலி கன்றி குன்றா\nஇன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,\nமன்னவ ராயுல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே.
Verse 824
தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு\nபொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய்\nஎன்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம்,\nபுன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே.
Verse 825
உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு\nமுருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,\nபெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்\nபொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.
Verse 826
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு\nதாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின்\nபேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் போது\nநாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே.
Verse 827
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்\nநங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன்\nமங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர்\nபொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே.
Verse 828
உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு\nதுணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின்\nதணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,\nபுணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே.
Verse 829
எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு\nவள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்\nகள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும்,\nபுள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே.
Verse 830
பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்\nஇரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?\nவிரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை\nபுரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே.
Verse 831
அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,\nசலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,\nஉலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை\nபுலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.
Verse 832
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப்\nபாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்\nஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப்\nபோதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே.
Verse 833
இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை\nபுலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்\nகலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை\nவலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே.
Verse 834
காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்\nஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ\nபூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்\nபாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே.
Verse 835
முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,\nமன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்\nபொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி\nஅன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.
Verse 836
வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்\nசெவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்\nபவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்\nதெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே.
Verse 837
பரிய இரணியன் தாகம் அணியுகிரால்\nஅரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு\nபொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்\nஅரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.
Verse 838
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த\nவல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,\nஎல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,\nபுல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.
Verse 839
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்\nஅழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்\nசெழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்\nஇழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே.
Verse 840
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்\nதினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார்\nமணிமாடப் புல்லாணி கைதொழுதேன்\nவினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.
Verse 841
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த\nபாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு\nபூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்\nதேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.
Verse 842
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,\nஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,\nபோதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,\nஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.
Verse 843
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை\nமின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை\nகன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்\nமன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே.
Verse 844
தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்\nதுவள என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்\nஇவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன\nகுவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
Verse 845
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே\nஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும்\nபேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார்\nகோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
Verse 846
காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்,\nபோல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி\nமாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன்கோல\nமயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
Verse 847
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்\nஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன்\nபெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி\nகுருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 848
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு\nகொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி\nபண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்\nகொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 849
எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார்\nநல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை\nவல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம்\nகொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 850
செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து என்\nஅங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை\nஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன்\nகொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 851
கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என் \nஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு\nஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன்\nகோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 852
சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்\nபோர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் என்கொங்கை\nமூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா\nகூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
Verse 853
செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப் பெற்றும் \nஎன் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்\nகற்றவன் காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்\nகொற்றவன் முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
Verse 854
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,\nபக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்\nதக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில்\nகொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே.
Verse 855
துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,\nபொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,\nசெங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,\nகொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே.
Verse 856
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,\nகேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,\nஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி,\nகூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.
Verse 857
சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன்\nஉரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,\nஇரவும் பகலும் ஈன்தேன் முரல,மன்றெல்லாம்\nகுரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே.
Verse 858
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்\nஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,\nமைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,\nகொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே.
Verse 859
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,\nதூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,\nமாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில்\nகூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே.
Verse 860
வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற,\nஅல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள்\nசொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான்,\nகொல்லை முல்லை மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.
Verse 861
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,\nஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,\nதாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய்\nநாரை பேடையொ டாடும் குறுங்குடியே.
Verse 862
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,\nசென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,\nஎன்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட,\nகுன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.
Verse 863
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்,\nகொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்,\nகலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை\nநிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே.
Verse 864
தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற\nபந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்\nஅந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய\nமைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே!
Verse 865
மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,\nஅன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,\nதுன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற\nமன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 866
பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தென்று,\nபேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்\nநீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த\nமாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 867
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று,\nஎண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல்,\nவிண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் வளங்கொள் முந்நீர்\nவண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 868
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்\nதுஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல்\nநஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட\nமஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 869
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு\nஅருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல்\nதிருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும்\nமருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 870
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா\nபேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,\nதீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற\nமாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 871
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற\nஅஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,\nசந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்\nவந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 872
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்றிவர் ஓது கின்ற\nகள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல்,\nதெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த,\nவள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
Verse 873
மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,\nசிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்\nகறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்\nஇறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே.
Verse 874
முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல்\nஅந்தர மேழும் அலைகட லேழும் ஆயவெம் மடிகள்தம் கோயில்,\nசந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து,\nவந்திழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 875
இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்\nஅண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில்\nவிண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்\nவண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 876
பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி\nஅணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில்\nகணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த\nமணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 877
சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து\nநீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில்\nகார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்\nவார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 878
வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள\nஅணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்\nபிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர பெருந்தேன்\nமணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 879
விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி,\nகுடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில்\nதடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து\nமடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 880
தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந்\nதெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,\nவானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து,\nமானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 881
புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று,\nபதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில்,\nகதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக,\nமதமிகு சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 882
புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு,\nஎந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,\nசந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும்,\nமந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
Verse 883
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி வண்ணரை வணங்கும்,\nதொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன்\nகண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல்,\nகொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே.
Verse 884
மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,\nபூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,\nதேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,\nகோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.
Verse 885
புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்\nமுனைவனை, மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை,\nசினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான்\nகனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே.
Verse 886
உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,\nகண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,\nதிண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,\nஅண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.
Verse 887
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,\nபங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,\nதிங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,\nநங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.
Verse 888
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து,\nவானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன்,\nதேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,\nவானவர் கோனையின்று வணங்கித்தொழ வல்லள் கொலோ.
Verse 889
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,\nவாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,\nதேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,\nகேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ.
Verse 890
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,\nகள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,\nதெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,\nவள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.
Verse 891
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,\nகாத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,\nதீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,\nமூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே.
Verse 892
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,\nபுலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,\nசிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,\nநலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே.
Verse 893
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,\nஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,\nமாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன\nபாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே.
Verse 894
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன், ஏத் தடியவர்\nதங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,\nபொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி,\nசெங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே.
Verse 895
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்\nசெவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,\nமௌவல் மாலைவண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்துமாருதம்\nதெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.
Verse 896
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,எமக்கு \nஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,\nதுள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை,\nதெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.
Verse 897
ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர்\nகூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,\nநாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு,நன்னறுந்\nதேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.
Verse 898
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த்\nதொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,\nமங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர்\nதிங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே.
Verse 899
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன்\nஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,\nநாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென,\nதேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.
Verse 900
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை\nநின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,\nகுன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து, இளந்\nதென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.
Verse 901
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து\nஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,\nதூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி\nதேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே.
Verse 902
கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை,\nமேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,\nமேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்,\nதேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே.
Verse 903
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில்\nசேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,\nநீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந்\nநாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே.
Verse 904
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்\nவருநல் தொல்கதி யாகிய மைந்தனை\nநெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்\nகருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே.
Verse 905
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்\nமின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்\nஎன்னை யாளுடை யீசனை யெம்பிரான்\nறன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே.
Verse 906
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய\nபாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை\nஆலியில் கண்டு மகிழ்ந்து போய்\nஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே.
Verse 907
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்\nபிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்\nஅளப்பி லாரமு தையம ரர்க்கருள்\nவிளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.
Verse 908
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்\nநடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்\nஉடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்\nவிடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே.
Verse 909
வானை ஆரமு தம்தந்த வள்ளலை\nதேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்\nஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்\nகோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே.
Verse 910
கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்\nமாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்\nபாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய\nவேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே.
Verse 911
பத்த ராவியைப் பான்மதி யை,அணித்\nதொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்\nமுத்தி னைமணி யைமணி மாணிக்க\nவித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே.
Verse 912
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்\nகொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை\nகொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்\nநம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே.
Verse 913
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை\nகற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த\nசொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு\nஅற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.
Verse 914
இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்\nபரக்க யாமின் றுரைத்தென் இரவணன் பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்\nகுரக்கு நாயகர் காள்இளங் கோவே கோல வல்வி லிராம பிரானே\nஅரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 915
பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,\nசித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் செய்வ தொன்றறி யாவடி யோங்கள்\nஒத்த தோளிரண் டுமொரு முடியும் ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்\nஅத்த எம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 916
தண்ட காரணி யம்புகுந் தன்று தைய லைத்தக விலியெங் கோமான்\nகொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே\nபெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் பேசு கின்றதென்? தாசர தீ,உன்\nஅண்ட வணர் உகப்பதே செய்தாய் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 917
எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே\nநஞ்சு தானரக் கர்குடிக் கென்று நங்கை யையவன் தம்பியே சொன்னான்\nவிஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார்பொழில் மாமயி லன்ன\nஅஞ்சி லோதியைக் கொண்டு நடமின் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 918
செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து\nவம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்\nகும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி\nஅம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 919
ஓத மாகட லைக்கடந் தேறி உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து\nகாதல் மக்களும் சுற்றமுங் கொன்று கடியி லங்கை மலங்க எரித்துத்\nதூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே\nஆதர் நின்று படுகின்ற தந்தோ அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 920
தாழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று தகைந்த தேகண்டு வஞ்சிநுண் மருங்குல்\nமாழை மான்மட நோக்கியை விட்டு வாழ்கி லாமதி யில்மனத் தானை\nஏழை யையிலங் கைக்கிறை தன்னை எங்க ளையொழி யக்கொலை யவனை\nசூழ மாநினை மாமணி வண்ணா சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 921
மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப\nதனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து தஞ்ச மேசில தாபத ரென்று\nபுனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த\nஅனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 922
புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்\nசரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்\nஇரங்கு நீயெமக் கெந்தைபி ரானே இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா\nகுரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல் கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 923
அங்கவ் வானவர்க் காகுலம் தீர அணியி லங்கை அழித்தவன் றன்னை\nபொங்கு மாவல வன்கலி கன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்\nஎங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். இம்மை யேயிட ரில்லை, இறந்தால்\nதங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
Verse 924
ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்\nசோத்தம் நம்பீ. சுக்கி ரீவா உம்மைத் தொழுகின்றோம்\nவார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே\nகூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 925
எம்பி ரானே என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே\nஅம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்\nநம்பி அனுமா சுக்கி ரீவ அங்கத னே நளனே\nகும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.
Verse 926
ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்\nகால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்\nநீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று\nகோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 927
மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை\nபுணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்\nகணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்\nகுணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 928
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக\nஇன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள்\nநின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே\nகுன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 929
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை\nஅல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து\nவெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,\nகொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 930
மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர்\nசீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே\nஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று\nகூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே.
Verse 931
கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்\nதுவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே\nதவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்\nகுவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே.
Verse 932
ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்\nஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்\nசூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்\nகூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே.
Verse 933
வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து\nஅன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை\nகன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை\nஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே.
Verse 934
சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே\nவந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து,\nநந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே,\nஎந்தை பெருமனே உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.
Verse 935
வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ\nசெங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா,\nகொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன்\nஎங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே.
Verse 936
திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு\nதெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,\nஉருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,\nமருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய்.
Verse 937
மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார்\nமக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய்\nசெக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன்\nஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய்.
Verse 938
மைத்த கருங்குஞ்சி மைந்தா மாமரு தூடு நடந்தாய்,\nவித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,\nஇத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,\nஉத்தமனே அம்மம் உண்ணாய் உலகளந் தாய் அம்மம் உண்ணாய்.
Verse 939
பிள்ளைய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை\nகள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி\nஉள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற\nபள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய்.
Verse 940
தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க\nவன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி\nநன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா\nஎன்மக னே அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.
Verse 941
உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்\nநொந்திட மோதவுங் கில்லேன்நுங்கள்தம் ஆநிரை யெல்லாம்\nவந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண\nஅந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே வாராய்.
Verse 942
பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய்,\nசுற்றக் குழாத்திளங் கோவே தோன்றிய தொல்புக ழாளா,\nகற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே\nஎற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே.
Verse 943
இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி\nசெம்மைப் பனுவல்நூல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை\nஅம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்\nமெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே.
Verse 944
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,\nஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு\nஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்\nஓங்கோத வண்ணனே! சப்பாணிஒளிமணி வண்ணனே சப்பாணி.
Verse 945
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண் டேயெம் பிராக்கள்!\nஇருநிலத் தெங்கள்தம் ஆயர் அழக அடிகள் அரவிந்த\nவாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே!\nகொட்டாய் சப்பாணி.
Verse 946
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு\nதாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்\nதாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த\nதாமோ தரா! கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே! சப்பாணி.
Verse 947
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து\nஉற்றா ரொருவரு மின்றி யுலகினில்,\nமற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட\nகற்றாயனே!கொட்டாய் சப்பாணி கார்வண்ணனே!கொட்டாய் சப்பாணி.
Verse 948
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,\nபேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன\nஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்\nசாற்றியோ ராயிரம் சப்பாணி தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி.
Verse 949
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு\nநானவல் அப்பம் தருவன் கருவிளைப்\nபூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,\nகோவலனே! கொட்டாய் சப்பாணி குடமாடீ! கொட்டாய் சப்பாணி.
Verse 950
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,\nதுள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,\nஅள்ளிய கையா லடியேன் முலைநெருடும்\nபிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி பேய்முலை யுண்டானே! சப்பாணி.
Verse 951
யாயும் பிறரும் அறியாத யாமத்து,\nமாய வலவைப்பெண் வந்து முலைதர,\nபேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,\nவாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே!கொட்டாய் சப்பாணி.
Verse 952
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை\nதள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,\nமெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,\nவள்ளலே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி.
Verse 953
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,\nபேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட சீராளா, \nசெந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்\nதாராளா, கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி.
Verse 954
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா யுலகத் தறநூல்\nசிங்கா மைவிரித் தவனெம் பெருமான் அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,\nபொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,\nஅங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
Verse 955
குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்\nநின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,\nநன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,\nஅன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,
Verse 956
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்\nவிளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,\nவளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,\nஅளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 957
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் சரணாய் முரணா யவனை உகிரால்\nபிளந்திட் டமரர்க் கருள்செய் துகந்த பெருமான் திருமால் விரிநீ ருலகை,\nவளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்\nஅளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
Verse 958
நீண்டான் குறளாய் நெடுவா னளவும் அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,\nதீண்டா மைநினைந் திமையோ ரளவும் செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,\nவேண்டா மைநமன் றமரென் தமரை வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்\nஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 959
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,\nஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல பெருமான் திருமா லதுவன் றியும்முன்,\nதெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் சினத்தோள் அவையா யிரமும் மழுவால்\nஅழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 960
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,\nதுடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் தெளியா அரக்கர் திறலபோய் அவிய,\nமிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை\nஅடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 961
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ டுடனாய வில்லென்ன வல்லே யதனை,\nஇறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,\nசெறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,\nஅறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 962
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா\nதிரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் இருகூறு செய்த பெருமான் முனநாள்\nவரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,\nஅரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
Verse 963
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,\nஅன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,\nநன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,\nஎன்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே.
Verse 964
மான முடைத்துங்க ளாயர் குலமத னால்பிறர் மக்கள் தம்மை\nஊன முடையன செய்யப் பெறாயென் றிரப்ப னுரப்ப கில்லேன்\nநானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நானென் செய்கேன்?\nதானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர்கடை கின்றான் போலும்.
Verse 965
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் போகின்றேன் கண்டே போனேன்,\nமாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்றுவந் தாரு மில்லை,\nமேலை யகத்துநங் காய் வந்து காண்மின்கள் வெண்ணெ யேயன்று, இருந்த\nபாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என்செய்கேன் என்செய் கேனோ.
Verse 966
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள் உறி மேலைத் தடாநி றைந்த,\nவெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு,\nகள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் கையெல் லாம்நெய்,வயிறு\nபிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் பேதையேன் என்செய் கேனோ.
Verse 967
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி,\nதன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனி வைசெய் தறியான் \nபொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்ற வாதவழ்ந் திட்டு,\nஇந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை என்செய்கேன் என்செய் கேனோ.
Verse 968
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை,\nசந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை யாடு மிடம்கு றுகி,\nபந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,\nநந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
Verse 969
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை,\nஅண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே அல்லிற் றான்வந்த பின்னை,\nகண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய்வெ ளுப்ப,\nஎன்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
Verse 970
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப,\nபாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம்,\nபோயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய்,\nமாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும்.
Verse 971
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஓர்க்குடன் துற்றிடு மென்று,\nஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் கெள்கி யிவனை நங்காய்\nசோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என் றிரப்பன் உரப்ப கில்லேன்,\nபேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் பேசுவ தஞ்சு வேனே.
Verse 972
ஈடும் வலியும் உடையவிந் நம்பி பிறந்த ஏழு திங்களில்,\nஆடலர் கண்ணியி னானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்,\nசேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடி யால்,மலை போல\nஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவ தஞ்சு வேனே.
Verse 973
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யைப்,\nபஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற பாகந் தான்வை யார்களே,\nகஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை,\nநெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ என்செய்கே னென்செய் கேனோ.
Verse 974
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ ஆயர் மடமக் களைப்,\nபங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து,\nஅங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப,\nமங்கைநல் லீர்வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும்.
Verse 975
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் காண்மை யும்சே வகமும்,\nஉச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் குரைத்திலன் தானின் றுபோய்,\nபச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்\nநச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
Verse 976
தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி யேநின்று தாம்செய் வாரோ?\nஎம்பெரு மான் உன்னைப் பெற்ற வயிறுடை யேனினி யானென் செய்கேன்?\nஅம்பர மேழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்க ணுடை\nவம்பவிழ் கானத்து மால்விடை யோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
Verse 977
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் தஞ்ச அருவரை போல,\nமன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு,\nகன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி\nஇன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே.
Verse 978
காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து,\nதாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து,\nபோது மறுத்துப் புறமேவந் துநின்றீர்,\nஏதுக்கிது என்னிது என்னிது என்னோ
Verse 979
துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,\nகவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி,\nசுவரார் கதவின் புறமேவந்து நின்றீர்,\nஇவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 980
கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர்,\nஉருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,\nமருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,\nஇருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 981
நாமம் பலவு முடைநா ரணநம்பீ,\nதாமத் துளவம் மிகநா றிடுகின்றீர்,\nகாம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர்,\nஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 982
சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து,\nமற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,\nமுற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,\nஎற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 983
ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக்,\nகூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப்,\nபோனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர்,\nஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 984
மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,\nஅல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை,\nசொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்\nஎல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 985
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,\nஇக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,\nதக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,\nஎக்கே இதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 986
ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்\nகூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,\nதேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,\nஏடி இதுவென் னிதுவென் னிதுவென்னோ.
Verse 987
அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி\nஎல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,\nகல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை,\nசொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே.
Verse 988
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள, இலங்கை\nஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோ,\nகள்ளவிழ் கோதை காதலு மெங்கள் காரிகை மாதர் கருத்தும்,\nபிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் பேசுவ தெந்தை பிரானே.
Verse 989
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி மால்விடை யேழும டர்த்து, ஆயர்\nஅன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான்,\nநின்ற பிரானே நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில்,\nமுன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே.
Verse 990
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,\nகார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் கடந்தநின் கடுந்திறல் தானோ,\nநேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை,\nஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவளெனக் கருதுகின் றாயே.
Verse 991
மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,\nநல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?\nஅல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,\nசொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே.
Verse 992
செருவழி யாத மன்னர்கள் மாளத் தேர்வலங் கொண்டவர் செல்லும்,\nஅருவழி வானம் அதர்படக் கண்ட ஆண்மைகொ லோவறி யேன்நான்,\nதிருமொழி யெங்கள் தேமலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ,\nபெருவழி நாவற் கனியினு மெளியள் இவளெனப் பேசுகின் றாயே.
Verse 993
அரக்கிய ராகம் புல்லென வில்லால் அணிமதி ளிலங்கையர் கோனை,\nசெருக்கழித் தமரர் பணியமுன் னின்ற சேவக மோசெய்த தின்று\nமுருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் கொண்டுமுன் னேநின்று போகாய்,\nஎருக்கிலைக் காக எறிமழு வோச்சல் என்செய்வ தெந்தை பிரானே.
Verse 994
ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச அலைகடல் உலகம்முன் ஆண்ட,\nபாழியந் தோளோ ராயிரம் வீழப் படைமழுப் பற்றிய வலியோ?\nமாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,\nகோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா.
Verse 995
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற வள்ளுகி ரால்பிளந்து, அன்று\nபெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த பெருமைகொ லோசெய்த தின்று,\nபெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்,\nகருங்கடல் வண்ணா கவுள்கொண்ட நீராம் இவளெனக் கருதுகின் றாயே.
Verse 996
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ?\nசீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ?\nபார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு,\nஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே.
Verse 997
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை,\nவாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,\nதோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த,\nபாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே வெண்டுறை.
Verse 998
திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன்,\nமருத்தார்தொல்புகழ் மாதவ னைவரத் திருத்தாய் செம்போத்தே.
Verse 999
கரையாய் காக்கைப்பிள்ளாய், கருமாமுகில் போல்நிறத்தன்,\nஉரையார் தொல்புக ழுத்தம னைவரக், கரையாய் காக்கைப்பிள்ளாய்.
Verse 1000
கூவாய் பூங்குயிலே, குளிர்மாரி தடுத்துகந்த,\nமாவாய் கீண்ட மணிவண்ண னைவரக், கூவாய் பூங்குயிலே.
Verse 1001
கொட்டாய் பல்லிக்குட்டி, குடமாடி யுலகளந்த,\nமட்டார் பூங்குழல் மாதவ னைவரக், கொட்டாய் பல்லிக்குட்டி.
Verse 1002
சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலனுயர்த்த,\nமல்லார் தோள்வட வேங்கட வன்வர, சொல்லாய் பைங்கிளியே.
Verse 1003
கோழி கூவென்னுமால், தோழி நானென்செய்கேன்,\nஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று கோழி கூவென்னுமால்.
Verse 1004
காமற் கென்கடவேன், கருமாமுகில் வண்ணற்கல்லால்,\nபூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக், காமற் கென்கடவேன்.
Verse 1005
இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப,\nகொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ.
Verse 1006
இன்னா ரென்றறியேன், அன்னே. ஆழியொடும்,\nபொன்னார் சார்ங்க முடைய அடிகளை, இன்னா ரென்றறியேன்.
Verse 1007
தொண்டீர். பாடுமினோ, சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,\nஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள், தொண்டீர். பாடுமினோ.
Verse 1008
குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை\nஅன்று காத்தவம் மான்,அரக்கரை\nவென்ற வில்லியார் வீர மேகொலோ,\nதென்றல் வந்து தீ வீசு மென்செய்கேன்.
Verse 1009
காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,\nதாரு மார்வமும் கண்ட தண்டமோ,\nசோரு மாமுகில் துளியி னூடுவந்து\nஈர வாடைதான் ஈரு மென்னையே.
Verse 1010
சங்கு மாமையும் தளரு மேனிமேல்,\nதிங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,\nபொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,\nகொங்க லார்ந்ததார் கூவு மென்னையே.
Verse 1011
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,\nஅங்கொர் தாயுரு வாகி வந்தவள்,\nகொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ,\nதிங்கள் வெங்கதிர் சீறு கின்றதே.
Verse 1012
அங்கொ ராளரி யாய்,அவுணனைப்\nபங்க மாவிரு கூறு செய்தவன்,\nமங்குல் மாமதி வாங்க வேகொலோ\nபொங்கு மாகடல் புலம்பு கின்றதே.
Verse 1013
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,\nவென்ற வில்லியார் வீர மேகொலோ,\nமுன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,\nஅன்றி லின்குரல் அடரு மென்னையே.
Verse 1014
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,\nமேவி நின்றுநான் கண்ட தண்டமோ,\nவீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,\nஆவி யேயிலக் காக எய்வதே.
Verse 1015
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,\nமாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,\nகோல வாடையும் கொண்டு வந்தது,\nஓர் ஆலி வந்ததால் அரிது காவலே.
Verse 1016
கொண்டை யொண்கணும் துயிலும்,\nஎன்நிறம் பண்டு பண்டுபோ லொக்கும்,\nமிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,\nவண்டு கொண்டுவந் தூது மாகிலே.
Verse 1017
அன்று பாரதத் தைவர் தூதனாய்,\nசென்ற மாயனைச் செங்கண் மாலினை,\nமன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி\nகன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே.
Verse 1018
குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்\nமன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,\nமுன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற\nஅன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ.
Verse 1019
பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து,\nஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை\nவாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய்,\nஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே.
Verse 1020
மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்,\nஅல்லி மலர்த்தண் டுழாய்நி னைந்திருந் தேனையே,\nஎல்லி யின்மா ருதம்வந் தடுமது வன்றியும்,\nகொல்லைவல் லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே.
Verse 1021
பொருந்து மாமர மேழு செய்த புனிதனார்\nதிருந்து சேவடி யென்ம னத்து நினைதொறும்,\nகருந்தண் மாகடல் மங்கு லார்க்கும் அதுவன்றியும்,\nவருந்த வாடை வருமி தற்கினி யென்செய்கேன்.
Verse 1022
அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,\nமன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,\nபொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,\nபின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.
Verse 1023
ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,\nபாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,\nதோழியும் நானு மொழிய வையம் துயின்றது,\nகோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே.
Verse 1024
காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார்,\nமாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில்,\nயாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள்,\nமாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே.
Verse 1025
மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார்,\nநெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர்,\nவெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ,\nநஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே.
Verse 1026
காமன் கணைக்கோ ரிலக்க மாய்நலத் தில்மிகு,\nபூமரு கோலநம் பெண்மை சிந்தித்தி ராதுபோய்\nதூமலர் நீர்கொடு தோழி நாம்தொழு தேத்தினால்\nகார்முகில் வண்ணரைக் கண்க ளால்காண லாங்கொலோ.
Verse 1027
வென்றி விடையுட னேழ டர்த்த அடிகளை,\nமன்றில் மலிபுகழ் மங்கை மன்கலி கன்றிசொல்,\nஒன்று நின்றவொன் பதுமு ரைப்பவர் தங்கள்மேல்\nஎன்றும் நில்லாவினை யொன்றும் சொல்லி லுலகிலே.
Verse 1028
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்\nபொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்\nதென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்\nஎன்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே.
Verse 1029
இருந்தானெ னுள்ளத் திறைவன்,கறைசேர்\nபருந்தாள் களிற்றுக் கருள்செய்த,\nசெங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட\nவருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே.
Verse 1030
அன்னே! இவரை யறிவன், மறைநான்கும்\nமுன்னே யுரைத்த முனிவ ஜீவர்வந்து\nபொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து\nஎன்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே.
Verse 1031
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,\nவெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,\nசிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார்\nநறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே?
Verse 1032
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு,\nதம்மையே யொக்க அருள்செய்வ ராதலால்,\nதம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி,\nதம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே.
Verse 1033
வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்\nஉய்த்தா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்\nஎய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,\nகைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே.
Verse 1034
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்\nஎன்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?\nபெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,\nஅண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.
Verse 1035
பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று\nஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து\nசூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்\nகூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே.
Verse 1036
நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும்,\nஅன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,\nமுன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,\nபொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே.
Verse 1037
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்\nபெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,\nகற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க\nலுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே.
Verse 1038
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்\nதலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால்\nஅலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்\nமலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே.
Verse 1039
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே\nவெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,\nபருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,\nஅருவரை யன்ன தன்மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
Verse 1040
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்ப ருலகேழி னோடு முடனே,\nமாதிர மண்சு மந்து வடகுன்று நின்ற மலையாறும் ஏழு கடலும்\nபாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,\nஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி அதுனம்மை யாளு மரசே.
Verse 1041
தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,\nஅளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்க ளவிழ,\nவளையுகி ராளி மொய்ம்பில் மறவோன தாகம் மதியாது சென்றொ ருகிரால்\nபிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே.
Verse 1042
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர\nசெந்தொழில் வேத நாவின் முனியாகி வைய முடிமூன் றிரந்து பெறினும்,\nமந்திர மீது போகி மதிநின்றி றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,\nஅந்தர மேழி னூடு செலவுய்த்த பாதம் அதுநம்மை யாளு மரசே.
Verse 1043
இருநில மன்னர் தம்மை யிருநாலும் எட்டு மொருநாலு மொன்று முடனே,\nசெருநுத லூடு போகி யவராவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்,\nபெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,\nபெருநில முண்டு மிழ்ந்த பெருவாய ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே.
Verse 1044
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் என்ன இனமாய மான்பின் எழில்சேர்\nஅலைமலி வேல்க ணாளை யகல்விப்ப தற்கொ ருருவாய மானை யாமையா\nகொலைமலி யெய்து வித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்\nசிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமால் நமக்கொ ரரணே.
Verse 1045
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டியுண்ண முதலோடு வீடு மறியாது\nஎன்னிது வந்த தென்ன இமையோர் திகைப்ப எழில்வேத மின்றி மறைய\nபின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ\nஅன்னம தாயி ருந்தங் கறநூல் உரைத்த அதுநம்மை யாளு மரசே.
Verse 1046
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய\nஉணமுலை முங்கொடுத்த வுரவோள தாவியுகவுண்டு வெண்ணெய் மருவி\nபணமுலை யாயர் மாத ருரலோடு கட்ட அதனோடு மோடி அடல்சேர்\nஇணைமரு திற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.
Verse 1047
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா\nசிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்\nகலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்\nஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டரவராள்வ ரும்ப ருலகே.
Verse 1048
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,\nகானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ\nகானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,\nவானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.
Verse 1049
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி\nநந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,\nநந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்\nதந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே.
Verse 1050
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்\nதாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,\nதாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்\nவேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே.
Verse 1051
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி\nஉறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ\nஉறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,\nஎறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே.
Verse 1052
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,\nகண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,\nகண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,\nஎண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.
Verse 1053
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,\nமன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,\nமன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,\nஎன்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே.
Verse 1054
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,\nதூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,\nதூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,\nஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.
Verse 1055
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,\nதேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,\nதேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,\nதார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.
Verse 1056
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,\nவண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,\nவண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்\nவிண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.
Verse 1057
கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,\nவெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,\nவெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி\nஉள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே.
Verse 1058
மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி வானவரும் யாமுமெல்லாம்,\nநெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்,\nஎந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்?\nசெய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள் அண்டனையே ஏத்தீர்களே.
Verse 1059
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்தகாலம்,\nமல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து,\nஅன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,\nஅல்லாதார் தாமுளரே? அவனருளே உலகாவ தறியீர்களே?
Verse 1060
நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,\nஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,\nவெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,\nகொற்றப்போ ராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே.
Verse 1061
பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம்,\nஇனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி\nமுனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் வைத்தும்மை உய்யக்கொண்ட\nகனிகளவத் திருவுருவத் தொருவனையே கழல்தொழுமா கல்லீர்களே.
Verse 1062
பாராரும் காணாமே பரவைமா நெடுங்கடலே யானகாலம்,\nஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது,உள்ளத்\nதோராத வுணர்விலீர். உணருதிரேல் உலகளந்த வும்பர்கோமான்,\nபேராளன் பேரான பேர்களா யிரங்களுமே பேசீர்களே.
Verse 1063
பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,\nதாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,\nபோயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர், பெற்ற\nதாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே.
Verse 1064
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்\nஉண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,\nகண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனையுள்ளத்\nதெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே.
Verse 1065
மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்,\nபுறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,\nஅறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட,\nநிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
Verse 1066
அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று,\nதொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி, உலகமேழும்\nஉண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட,\nகொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே.
Verse 1067
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,\nயாவரையு மொழியாமே யெம்பெருமான் உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன,\nகாவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,\nபூவளரும் திருமகளால் அருள்பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே.
Verse 1068
நீள்ணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்\nபேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,\nபூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,\nகாணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே.
Verse 1069
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,\nதாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,\nதோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,\nகேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.
Verse 1070
தூயானைத் தூய மறையானை, தென்னாலி\nமேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட\nவாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,\nபேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே.
Verse 1071
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,\nஓடா அடலரியை உம்பரார் கோமனை,\nதோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்\nபாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.
Verse 1072
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,\nகொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட\nமெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்\nகையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
Verse 1073
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,\nமுள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,\nபுள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,\nஉள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே.
Verse 1074
கனையார் கடலும் கருவிளையும் காயாவும்\nஅனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்\nசுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,\nநினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே.
Verse 1075
வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த\nஉறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட\nசிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்\nதறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.
Verse 1076
தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,\nதானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,\nஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,\nமானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே.
Verse 1077
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்\nகைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,\nகைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,\nஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.
Verse 1078
மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்\nதோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,\nஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,\nநாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ.
Verse 1079
சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்\nதோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,\nகாற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,\nஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா.
Verse 1080
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,\nவாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,\nபாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,\nதாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.
Verse 1081
உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,\nதிரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி,\nஇருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,\nஉருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா.
Verse 1082
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,\nதள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,\nவெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,\nஉள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா.
Verse 1083
படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்\nமடைநின் றலரும் வயலாலி மணாளா,\nஇடையன் எறிந்த மரமேயொத் திராமே,\nஅடைய அருளா யெனக்குன்ற னருளே.
Verse 1084
வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன்\nநான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,\nதேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்\nபாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ.
Verse 1085
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,\nதுணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,\nமணியே மணிமா ணிக்கமே மதுசூதா,\nபணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதி.
Verse 1086
நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும் எந்தாய்\nதொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,\nசந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா,\nஅந்தோ அடியேற் கருளாயுன் னருளே.
Verse 1087
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,\nமன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,\nஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல்,\nஎன்றும் வினையாயின சாரகில் லாவே.